வியாழன், 23 பிப்ரவரி, 2012

பாரதிகலை - 4

வழிமுறை


கீழே உள்ள கட்டங்களில் மகாகவி பாரதியாரின் பாடல் ஒன்றின் சில வரிகள் நெடுக்காக மட்டும் கலைந்துள்ளன. கறுப்புக் கட்டங்கள் வார்த்தை அல்லது  வாக்கிய முடிவுகளைக் குறிக்கின்றன. அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்ற முடியும்.எழுத்துக்களை மெல்ல தட்டித் (click) தட்டி இப்பக்கத்திலேயே புதிரை அவிழ்க்கலாம்.

இம்முறை, அனேகர் கேள்விப்பட்டே இருக்காத பாடல் ஒன்றிலிருந்து எடுத்திருக்கிறேன்.   சூரியன் உதிப்பதும் பூமியில் உயிரினங்களெல்லாம் உற்சாகமடைவதும், நாம் எல்லோரும் ஒவ்வொரு நாளும் காணும் நிகழ்ச்சி.
அதுவே பாரதியார் கண்களுக்குத் தாயாம் பூமியும், தந்தையாம் உதய ஞாயிறும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதலை வெளிப்படுத்துவதாகத் தெரிகிறது! 

விடை கண்டுபிடிக்க இரண்டு வார இறுதிகள் இருக்கின்றன.  


புதிரை முழுதும் கண்டுபிடித்து விட்ட பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்” என்னும் பொத்தானை அழுத்தினால், நீங்கள் சரி செய்த வரிகள் கிடைக்கும். அதை பின்னூட்டத்தில் இடவும். 
 
மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமாகவும் அனுப்பலாம்.

    

முக்கியக் குறிப்புகள்:
(முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு)

இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/02/3.html

புதன், 1 பிப்ரவரி, 2012

பாரதிகலை -2

கலைமொழி, மனு அறிமுகப்படுத்திய சுவாரசியமான, பலரையும் கவர்ந்திழுக்கும் ஒரு விளையாட்டு.  புதிரமைக்கவும், வலைப்பக்கத்திலேயே விடுப்பதற்கும் அருமையான ஒரு மென்பொருளை உருவாக்கி விட்டார் “யோசிப்பவர்” இருவருக்கும் நன்றிகள் பல!

சில புதிர்களில் பங்கு கொண்ட பின், எனக்கும் புதிரமைக்க ஆசை வந்ததுவிட்டது!  இம்முயற்சியில் “யோசிப்பவர்”, ”பூங்கோதை” மற்றும் “அம்மா” எனக்கு முன்னோடிகளாக வழிகாட்டினார்கள். இவர்களுக்கும் என் நன்றிகள்!

இதில் என் முயற்சியாக மகாகவி பாரதியின் பாடல்களிலிருந்து சில வரிகளை நினைவு படுத்த எண்ணி இருக்கிறேன்.

பாரதியார் பாடல் தொகுப்பு கைவசமில்லாவிட்டால், இங்கே பார்க்கவும்:

http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/index.asp

வழிமுறை

கீழே உள்ள கட்டங்களில் மகாகவி பாரதியாரின் பாடல் ஒன்றின் சில வரிகள் நெடுக்காக மட்டும் கலைந்துள்ளன. கறுப்புக் கட்டங்கள் வார்த்தை அல்லது  வாக்கிய முடிவுகளைக் குறிக்கின்றன. அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்ற முடியும்.எழுத்துக்களை மெல்ல தட்டித் (click) தட்டி இப்பக்கத்திலேயே புதிரை அவிழ்க்கலாம்.

இம்முறை, மகாகவியின் தேசியப் பாடல் வரிகள் சில கொடுத்துள்ளேன். நன்கு தெரிந்த, மிகப் பிரபலமான பாடல் - ஆனால், இங்கு இருக்கும் வரிகள்
அதிகம் பாடப் பெற்றிருக்கவில்லை.
முக்கியக் குறிப்புகள்:


(முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு)


1.   இது நாம் பழகிய குறுக்கெழுத்துப் போட்டி போல் தோற்றமளித்தாலும், 
     அடிப்படையில் மிக வித்தியாசமானது.  


     அ.  இறுதி விடை இடமிருந்து வலமாகப் படிக்கப்படும்  மேலிருந்து கீழ்
            பற்றி அக்கறை இல்லை.
   ஆ.   நெடுக்காக (மேலிருந்து கீழ்) எந்த எழுத்தும் எந்த இடத்திற்கும்
            மாற்றப் படலாம்; இடையில் உள்ள கறுப்புக் கட்டங்களத் தாண்டியும்                      மாற்றப்படலாம்.

2.  விடை கண்டுபிடித்தவுடன் "completed" (அ) ”முடித்துவிட்டேன்” என்னும் பதத்தை சொடுக்கினால், உங்கள் விடை நகல் எடுக்க வசதியாக வலப்புறம் உள்ள வெற்றிடத்தில் வரும்.

பாடல் சொற்களைச் செய்யுள் வடிவத்திலிருந்து சற்று மாற்றி அமத்திருக்கிறேன். உதாரணமாக, செய்யுள் வடிவம் “பேயா யுழலும்” என்றிருந்தால், இங்கு “பேயாய் உழலும்” என்று காணப் படும். பாடல் அறிமுகம் இல்லாதவர்களும், தமிழ் மொழியின் அடிப்படை விதிகளை மனதிற் கொண்டு விடையைக் கண்டு பிடிக்க இது வழி கொடுக்கும்.

உங்கள் விடையை "comment” மூலமாகவோ அல்லது மின் அஞ்சல் (inamutham@gmail) மூலமாகவோ அனுப்பலாம்.

பாரதிகலை -1 விடை: 


சரியான விடை அளித்த யோசிப்பவர், பூங்கோதை, மாதவ் மற்றும் தமிழ் பிரியன் இவர்களுக்கு நன்றி.
பின்னூட்டு மூலம் கருத்துக்களைக் கூறிய அனைவருக்கும் நன்றி.


பின்பற்றுபவர்கள்