வெள்ளி, 23 மார்ச், 2012

சொல் கலை - முத்து 1

குறிக்கோள்:

கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் (clue line) பொருந்த வேண்டும்!

படிப்படியாக:

1.  எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி, மூலச்சொற்களை வெளிப்படுத்தவும்.
          குறிப்பு:  ஒரே வரியில் இரண்டு எழுத்துக் கட்டங்களைத் தட்டினால், அந்த    எழுத்துக்கள் இடம் பெயர்வதைக் காணலாம்.)
2.  அர்த்தமுள்ள வார்த்தைகள் கிடைத்தபின் "இறுதி விடைக்கான எழுத்துக்கள்" என்ற வரியை அழுத்துங்கள். இப்பொழுது மேலே  வண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள  வண்ணக் கட்டங்களுக்கு வந்துவிடும்.
3.  அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தி,  கொடுக்கப்பட்டிருக்கும்  துப்புக்குப் (க்ளூவுக்குப்) பொருத்தமான விடையை வெளிப்படுத்தவும்.
துப்பு/தடயம் (clue): மாவிலை பழுப்பதேன்? இரா வழி நடப்பதேன்?
4.  “முடித்துவிட்டேன்" என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த விடையை எதிரில் உள்ள பெட்டியில் பார்க்கவும்.
5.   உங்கள் விடையைப் பின்னூட்டம் (Post Comment) மூலமோ, மின்னஞ்சல் (இ(ன்)னமுதம்: inamutham@ gmail) மூலமோ அனுப்பவும்.
 


1.
2.
3.
4.


துப்பு/தடயம் (clue): ஆலிலை பழுப்பதேன்? இராவழி நடப்பதேன்?

வியாழன், 22 மார்ச், 2012

பாரதிகலை - 6

வழிமுறை

கீழே உள்ள கட்டங்களில் மகாகவி பாரதியாரின் பாடல் ஒன்றின் சில வரிகள் நெடுக்காக மட்டும் கலைந்துள்ளன. கறுப்புக் கட்டங்கள் வார்த்தை அல்லது  வாக்கிய முடிவுகளைக் குறிக்கின்றன. அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்ற முடியும்.எழுத்துக்களை மெல்ல தட்டித் (click) தட்டி இப்பக்கத்திலேயே புதிரை அவிழ்க்கலாம்.

தீமையெல்லாம் அழிந்து போக வழி இங்கு சொல்கிறார்!

புதிரை முழுதும் விடுவித்த பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்” என்னும் பொத்தானை அழுத்தினால், நீங்கள் சரி செய்த வரிகள் கிடைக்கும். அதை பின்னூட்டத்தில் இடவும். 
  
மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமாகவும் அனுப்பலாம்.

முக்கியக் குறிப்புகள்:
(முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு)

1.   இது நாம் பழகிய குறுக்கெழுத்துப் போட்டி போல் தோற்றமளித்தாலும்,
     அடிப்படையில் மிக வித்தியாசமானது. 

     அ.  இறுதி விடை இடமிருந்து வலமாகப் படிக்கப்படும்  மேலிருந்து கீழ்
            பற்றி அக்கறை இல்லை.

    ஆ.   நெடுக்காக (மேலிருந்து கீழ்) எந்த எழுத்தும் எந்த இடத்திற்கும்
            மாற்றப் படலாம்; இடையில் உள்ள கறுப்புக் கட்டங்களைத்
            தாண்டியும்  மாற்றப்படலாம்.

     இ.  பாடல் சொற்களைச் செய்யுள் வடிவத்திலிருந்து சற்று மாற்றி அமத்திருக்கிறேன்.                                   உதாரணமாக, செய்யுள் வடிவம் “பேயா யுழலும்” என்றிருந்தால், இங்கு “பேயாய்
            உழலும்”    என்று காணப் படும். பாடல் அறிமுகம் இல்லாதவர்களும், தமிழ்                                       மொழியின் அடிப்படை  விதிகளை மனதிற் கொண்டு விடையைக் கண்டு பிடிக்க இது வழி                                   கொடுக்கும்.

பின்பற்றுபவர்கள்