(கலைமொழி) கலைந்த நினைவுகள் - 7

இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.

ஒரு மிகப் பழைய திரைப்படப் பாடல்  இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைக்கப் பட்டிருக்கிறது.     உலகம் போகும் போக்கை எள்ளி பாடப்பட்டது.  கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.   அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும்,   அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

கவனிக்க:  பொருளற்ற சொற்கள் (எதுகைக்காக) - தில்லாலங்கடி, ஏலேலோ போன்றவை _ இருக்கும்!

முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)



மேலே காணும் பெட்டியில் உங்கள் விடை தெரியும்.  அதை நகல் எடுத்து, பின்னூட்டம் (comment) மூலமோ மின்னஞ்சல் மூலமோ அனுப்ப வேண்டும்.

நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைந்த நினைவுகள் - 6: விடை:
பூமாலை நீயே புழுதி மண்மேலே வீணே வந்தேன் தவழ்ந்தாய் பறவை வீட்டில் நீ பிறந்திருந்தாலும் பசி நீங்கவே உணவும் பறந்தோடி வந்திடும் கோடானுகோடி ஏழை மாந்தர் வாடும் சீமான்கள் வாழும் நாட்டில் பிறந்தாய்
சரியான விடை அளித்தவர்கள்: யோசிப்பவர், நாகராஜன், மாதவ், மீனு ஜெய், ஹுஸைனம்மா
திரைப்படம் : பராசக்தி   இயற்றியவர்:  கலைஞர் மு. கருணாநிதி
சரியான விடை அளித்தவர்கள்: யோசிப்பவர், நாகராஜன், மாதவ்
பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.


(கொசுறு)   மறை குறியீட்டுப் புதிர்:
இங்கு பயன் படுத்தப் பட்டிருப்பது Atbash எனும்
வகையைச் சேர்ந்த ஒரு எளிய மறை குறியீடு.
மூலச் செய்தியை எழுத்துக்கு எழுத்து மாற்றி
அமைக்கப்படும்.


உதாரணம்:
என் பெ யர் முத்துசுப்ரமண்யம்  ==> ஊங் செ ளழ்  ஞுட்டுபுச்ழஞந்ளஞ்


கீழே இரண்டு திருக்குறள்கள் மறை குறியீடு கொண்டு
எழுதப்பட்டிருக்கின்றன.  மறை குறியீட்டைத் திறந்து
(decipher) குறள்களைக் கண்டு பிடிக்க வேண்டும்.
குறள் 1:
றக்கடஙாவாள சளஙெங்றொவ் லாவகிலங்
ணக்காய் டொராஔழெஙிங்
குறள் 2:
ஔறழ ஞுடவ ஊருட்டெவ்வாஞ்
ஓடி சறலங் ஞுடக்கே ஏவறு

Comments

  1. (கொசுறு) மறை குறியீட்டுப் புதிர்:
    யோசிப்பவர் சொல்வது:
    இது நல்ல ஆட்டமே. இனி வரும் இதுபோன்ற புதிர்களில் இதே encryption டெக்னிக்தானா? ஒவ்வொரு முறையும் encryption techniqueஐ மாற்றி ஒரு key word மட்டும் கொடுத்து decipher செய்யச் சொன்னால் சுவாரஸ்யமாக இருக்கும் என்று தோன்றுகிறது. இந்த முறை இரண்டும் தெரிந்த திருக்குறள் என்பதால், மூளை ஒரு வார்த்தையை டீகோட் செய்துமுடித்தவுடன் முழுதாய் டீசைபர் செய்யாமலேயே விடை எழுதத் தூண்டுகிறது. இதை தனிப் புதிராகவே போட்டிருக்கலாமே?! நான் முதலில் கவனிக்கவே இல்லை!! :)

    பதில்:
    வாழ்த்துக்கள்.

    இப்புதிரை முதல் முதல் விடுவித்தவர் நீங்கள்தான்.

    பிழையைக் களந்துவிட்டேன். நன்றி.

    இது என் 12- 14 வயதில் நானும் என் தங்கையும் விளையாடிய (கண்டு பிடித்த) மறை குறியீடு.

    முதல் முறை என்பதால் ஒரு பரிசோதனயாகப் போட்டுப் பார்த்தேன். மற்றவர்களும்
    இம்மாதிரிப் புதிர் அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. இளங்கோவன் சொல்வது:
    நான் புரிந்துகொண்ட வரையில் Atbash என்பது A=Z, B=Y, C=X... அப்படியென்றால், தமிழில், அ = ஔ,ஆ = ஓ.
    உங்களுடைய உதாரணத்தில், எ = ஊ , சரி...
    நீங்கள் மெய் எழுத்தை மேலிருந்து கீழாக எடுதுக்கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.. அப்படி என்றால். க் = ன், ங் = ற் என வரும்... அப்படி பார்த்தால்,
    என் பெ யர் முத்துசுப்ரமண்யம் ==> ஊக் மெ நத் புர்ருளும்தபல்நப்.

    நீங்கள் வேறு வகையில் அமைத்திருந்தால் அதனை எல்லோருக்கும் புரிவதுபோல் விளக்கி கூறினால் நன்றாக இருக்கும்...

    பதில்:

    உயிர் எழுத்துக்கள் நீங்கள் சொல்வதுபோல்தான். மெய் எழுத்துக்கள் அமைப்பு சற்று வேறு விதம். உயிர் எழுத்துக்களைப் பொருத்திவிட்டு, “குறள்” என்ற குறிப்பையும் கொண்டு மேலும் தொடர்ந்து வெற்றியடையலாம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2