செய்யுள் குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_1

குறுக்கெழுத்து - முத்து -2013_1 <!--Generated by PuthirMayam Crossword Builder Sun Dec 30 2012 22:41:29 GMT-0500 (Eastern Standard Time)

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தைப் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். 

ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம்.  நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும்.  செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

வார்த்தைகளைத் தேட இவை உதவலாம் : http://www.tamilvu.org/library/dicIndex.htm
                                        அகரமுதலி.com
                                        http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
3.செய்யுள் இறுதியில் சீர் குலைந்த சீரகம் சேர்ந்த பழங்காலத்தில் மத்தியகிழக்கு நாடு (5)
6.சுவைத்த அனுபவம் ஒரு சித்தத்தில் தெரியும் (4)
7.எண்ணெயில் சர்க்கரை - முடிவு என்ன (4)
8.பாதி மர்மம் புசித்தவர் பயந்தவர் (6)
13.எருதின் முதுகில் இருப்பது சிறு சட்டி விளக்கு - குழம்பினால் மிகையில்லை (6)
14.மணி உள்ளே திரும்பிய மரம் கைக்கு அலங்காரம் (4)
15.முன்பு கேட்டிராத மார் தட்டிய புதிர் தானமா? (4)
16.சபை ஆடும் கெஞ்சும் (5)

நெடுக்காக:
1. முதல் பலத்து திரும்பி வரு மழை ஐப்பசி-கார்த்திகையில் வரும் (5)
2.புத்தா ஈண்டு ஈ இல்லை புது வருடம் (5)
4.அரசி கர்மத்தில் அபிமானி (4)
5.அங்காடி பின்னே அறையப்படுவது வண்டி உருண்டோடத் தேவை (4)
9.வருந்தி மெய்யிழந்து வா (3)
10.அயோத்தி அரசி நல்ல தோழி (5)
11.பசு கொடுப்பதைக் காடு தொடரும் வறண்ட பிரதேசம் (5)
12.உறுதியில் நுழைந்த கடைசி குரு கள்வன் (4)
13.பாதி அணிந்த பாதி உடையோடு குழுத்தலைவர் வந்தார் குழுவோடு (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

நகல் அனுப்புக
-->

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2