சொல்கலை - முத்து 41

ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்
அமைக்கப்பட்டபுதிர்.

சொல்கலை - முத்து  40 விடைகளுக்கு, பக்கக் கடைசியில் பார்க்கவும்

முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html

புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.

மூலச் சொற்கள் நான்கிற்கும் மற்றும் இறுதி விடைக்கும் சங்கேதக் குறிப்புகள் (cryptic clues)  கொடுக்கப் பட்டிருக்கின்றன.  (இந்தக் குறிப்புகள் இல்லாமலும் மறைந்திருக்கும் சொற்களைக் கண்டு பிடிக்கலாம்)

1. பறவை பாடி மறைந்து சிவந்து அந்தி வெயிலில் தெரியும்
2. செய்யுள் இறுதியில் சீர் குலைந்த சீரகம் சேர்ந்த பழங்காலத்தில் மத்தியகிழக்கு நாடு
3. எருதின் முதுகில் இருப்பது சிறு சட்டி விளக்கு - குழம்பினால் மிகையில்லை
4. பாதி மர்மம் புசித்தவர் பயந்தவர்


பசு கொடுப்பதைக் காடு தொடரும் வறண்ட பிரதேசம்  (சங்கேதக் குறிப்பு/Cryptic Clue)

”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும்.  அதைப் படிவம் எடுத்து,  பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும்.  பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.

நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-
http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

சொல்கலை - முத்து  40 விடைகள்:
1) அச்சுக்கட்டு  2) கரிசலாங்கண்ணி  3) சாவதானம்  4) ஆடாதொடை  5) வெள்ளாண்மை  6) செப்பிடுவித்தை  7) தளை கழற்றிவிட இறுதி விடை: சட்டாம்பிள்ளை

 
உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 6 பேர் ):

ராமராவ், வேதா, ராமையா, வைத்தியநாதன், சுஜி,anonymous       


 இவர்கள் எல்லோரும் எல்லா விடைகளும் சரியாகக் கண்டுபிடித்திருந்தனர். அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள். 

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2