செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_9

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால்  இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பபார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும்  படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.
வார்த்தைகளைத் தேட இவை உதவலாம் :
http://www.tamilvu.org/library/dicIndex.htm
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/ குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_9

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.காசு வெளியிருக்க காசி போன மகாராசி உட்கொண்ட கர்மவீரர். (4)
5.மா வரம் தந்தே வாழவைக்கும் மாநிலத் தாயை வணங்குவோம். (7)
7.தலையாய லட்சணம் பொருந்திய கிரணம் மராட்டிய சுதந்திரவீரராகத் தோன்றியது. (4)
8.பாத்திராத ஐம்பது திம்பது தின்ற பின் வரும் நகரம். (5)
9.முதல் முதல் பள்ளத்தில் விழுந்தால் முக்தி! (4)
11.பொன் மாந்தர் மிருக வேட்டையாடிப் பெற்ற நீர்ப்பறவை. (4) (புதிய சொல்!)
12.பவம் நீக்கு; நீ மறை; முதிர்ச்சி காண்! (5)
14.பை பின்னே கை வைத்த பத்திரிகைப் பகுதி. (4)
16.தடுமாறிய பாவிங்க தரியா பொன் வணிகம் செய்பவர். (3,4)
18.வேங்கை நாட்டுள்ளோர் எழுத்தறிவற்றோர்! (4)

நெடுக்காக:
1.உக்காந்திருப்பவரில் ஒரு மஹாத்மா. (3)
2.சுவர் வர்ணம் ஒருவர் மறையத் தங்கம். (5)
3.குறைச் சம்மதம் தரும் காட்டுப் பசு. (2)
4.தவறாக எழுதிய நாணேற்றுபவர் நாட்டின் அரசியலமைப்பைத் தயாரித்தார். (6)
6.கம்பி மறைவில் தம்பியாராக வர ஆயத்தமா? (3)
8.ஒருங்கிணைந்த நாடுகள்? ஐயா நான்... யான் இல்லை! (2)
9.பிற்சேர்க்கை ஒரு மனம் இல்லா அனுமான சம்பந்தம். (6)
10.உயிர் போகும் தறுவாயிலும் தேசபிதா சொன்னாராம்... (2)
11.ஆடைக்கரையில் தங்கச்சரிவு. (5)
13.புகழ் கவிக்கு மெய்மறந்து மேலேறிக் குவியட்டும். (3)
15.உடனே கூரை போடப்பயன்படும். (3)
17.பதில் பாதி பணிவிடை (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_8 விடைகள்
விடைகள் சிவப்பு நிறத்தில் காட்டப் பட்டிருக்கின்றன; விளக்கம் சாய்வு, அடிக்கோடிட்ட எழுத்துக்கள் மூலம் தெரியும்)

குறுக்கு:
1 (5) சந்திப்பு: சுல்தானை விலக்கிய மைசூர் மன்னர்  (திப்பு)சந்தடி பாதி  (சந் ) யுடன் கூடுமிடம் (=சந்திப்பு).
4 (2) நதி: இடை சென்ற மககேசன் வாகனம் (= நந்தி - தி= நதி) ஆறு (=நதி)
6 (4) குறிப்பு: குப்பு இரண்டாம் இடத்தில் கதறி முடிவு (= றி)சேர்க்கும் சைகை.(=குறிப்பு)
7 (4) பேச்சடங்குவதில் அடங்கியது காரியம் (= ) சடங்க
9 (5) திதித்தது: கனி கொண்டு (= திதித்தது) துதித்தது துதி மாறியது  ( = துதித்தது - து +தி)= திதித்தது
12 (4) தாரையடி: நீண்ட ஊதுகுழலின் (இசைக்கருவியின் = தாரை) அடிப் பாகமா? இல்லை பெண்ணே  (அடி)! இது கவிஞர் பார்வையில் தண்மதியின் காதலிடி (=தாரை) + அடி! (=தாரையடி)
14 (4) வியக்க: அதிசயிக்க தக்க காவியக்கலை காலை மறைந்தது = காவியக்கலை - காலை = வியக்க
17. மாதா திரும்பினாள் தானாக (2) (= தாமா)
18 (3,2) பிரான் மலை: தலைவன்   (= பிரான்)பின்னே வந்த மலை வள்ளல் பாரி ஆண்ட பகுதி(= கொள்ளிமலை = பிரான் மலை)
 நெடுக்கு:

1 (3) சருகு: மெய் போக சருக்கும் காய்ந்த இலை  (சருக்கும் - க், ம் (மெய் போக) = சருகு)
2 (5) திருப்பதி: தாயார் குடி கொண்ட தலம் ஏழில் ஒன்று சேர்ந்த திருப்தி . ஏழில் ஒன்று ( == ஏழு ஸ்வரங்களில் ஒன்று)சேர்ந்த திருப்தி ( = திருப்தி+ப =திருப்பதி) .
3 (3) புரு: யயாதிக்கு இளமை ஈன்றான்: இடைஇழந்து புத்துரு ( = புத்துரு -த்து => இடை இழந்து) கொண்டான்; தந்தைக்குத் தன் இளமை ஈன்றான் (= புரு)
4 (3) நட்ட: சிவவாக்கியர் வாக்கில் பேசாத கல் (= நட்ட கல்)இறுதி இழந்த இழப்பு  (=நட்டம் -ம் = நட்ட)
5 (4) வெகுமதி: அதிக புத்தி (= வெகு மதி)பரிசு (=வெகுமதி). (4) = வெகுமதி
7 (3) சரித: மூன்று ஸ்வரம் ( = ச, ரி, த)தரும் முடியாத சரித்திரம் (= சரிதம் - ம் = சரித)
8 (4) மந்தாரை: மலருந்தாமரை மலருடன் மறைந்தால் மலரும் மலர். (4) (மலருந்தாமரை - மலரு = மந்தாரை)
10 (3) திண்டி: தினம் வண்டி மாறி வரும் ஊரில்  ( = திண்டிவனம்)காடு நீக்கினால் கிடைப்பது ( = திண்டிவனம் - வனம் = திண்டி))உணவு!(=திண்டி)
11 (5) துய்யவன்: வயதாய் துன்பம் சேர்த்து தாபம் நீக்க ( = வயதாய்  + துன்பம் - தாபம் = துய்யவன்)வெளிவருவான் புனிதன் (=துய்யவன்)

13 (3) யம்மா: வியப்பு (= யம்மா)சுழன்ற மாயம் (= மாயம் <=>யம்மா)
15 (3) கவலை: வருத்தம் கலை நடுவே தலையிடும்  (= கலை + வருத்தம் தலை = க வ லை)
16 (2) கோபி: பசு (= கோ)பைத்தியம் ( = பித்து)ஆரம்பம் (=பி) சினம் கொண்டவன் (=கோபி) (2).


பங்கு கொண்டு ஆதரித்தவர்கள் (15 பேர்):

ராமராவ், யோசிப்பவர், வைத்தியநாதன், 10அம்மா, ராமையா, சௌதாமினி சுப்ரமண்யம், கதிர்மதி (புது முகம்!), சசி பாலு, பார்த்தசாரதி, நாகராஜன், மாதவன், ஹரி பாலகிருஷ்ணன், சாந்தி,பவழமணி பிரகாசம் (புது வருகை!), நாகமணி ஆனந்தம் (புது வருகை)

அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்.    

பின்னூட்டக் குறிப்புகள்:
வீ. ஆர்.  பாலகிருஷ்ணன்

உயர் திரு முனைவர் அவர்களுக்கு,
வணக்கம் பல.  விடைகள் பின் வருமாறு.   கால தாமதத்தை ஈடு  செய் யும்  படியாக அனைத்து குறிப்புகளும் வெகு அருமை.  சிவவாக்கியர்  நட்ட நந்தியை பேச வைப்பதற்கு நான்கு மணி நேரம் பிடித்தது..  மிகவும் ரசித்த குறிப்புகளில் இதுவும் ஒன்று.

Parthasarathy Srinivasan

An enjoyable crossword. Liked Across-1 & 18 (had to google to get the answer) & Down 5 & 16.

யோசிப்பவர்

இந்த முறை நிறைய அருஞ்சொற்கள் - திதித்தது, துய்யவன், திண்டி
சரித - தமிழ் சொல்தானா?!?
திருப்பதி - too obvious

சரிதம் = சரித்திரம்; தம்ழ்ச் சொல்லே.   முடியாத சரித்திரம் = சரித;  சரியா?

முத்து

kathirmathi   
8 Down was nice

Thanks for participating and for your appreciative comment.

Sorry for 7 down; did not realize that I should not use incomplete words.  Thanks for bringing it to my attention.

Dear Muthu sir,

Well and wishing you the same. I can see your hard work you mentioned in your email in this puzzle :)... Lot of wonderful clues and some of them are hard to crack as well. Here is my first attempts. Couldn't find the answers for two of them yet though :(. Let me know if the answers are correct and I may need to bother you to give additional clues for the ones I don't find the answer yet :)

Great job and keep up the great work-nga sir.

Anbudan,
Nagarajan Appichigounder.
                  

பின்பற்றுபவர்கள்