ஞாயிறு, 29 டிசம்பர், 2013

கலைமொழி -முத்து 48

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு  உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்.

இங்கு மறைந்திருப்பது ஒரு பழம் பாடல் வரிகள்.  இவ்வரிகள் எந்தப் பொருளைக் குறிக்கின்றன?

புதிரை விடுவிக்க ஓர் உபாயம்! 

ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே  உள்ள வார்த்தையைக்  கண்டுபிடிக்க முயலவும்.  இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால்,  மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்!

”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள    
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 47 விடை:  
 
  மார்க் சுவிசேஷத்தில் மொத்தம் பதினாறு அதிகாரங்களே உள்ளன. இனி பொய் சொல்லுவது பாவம் என்ற தலைப்பிலான பிரசங்கத்தைத் தொடருகிறேன். பங்கேற்று விடை அளித்தவர்கள் (மொத்தம் 13 பேர் )
தமிழ் பிரியன், ராமராவ், வேதா முத்து, யோசிப்பவர், சுரேஷ் பாபு, கிரிஜா ரமேஷ், வைத்தியநாதன், நாகமணி ஆனந்தம், ராமையா, நாகராஜன், மீனாக்ஷி சுப்ரமணியன், V. சுப்ரமண்யம், சாந்தி
 
  அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள். 


சனி, 21 டிசம்பர், 2013

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2013- டிசம்பர் விடைகள்

புதிராக்கம்:முத்துசுப்ரமண்யம்
1
சி
 லா
2
த்
3
து

4
டை

 க்

லா

 ரை

ண்

5
 அ
6
 க
ம்
பா

7
 ம்
பு


பா


 ந்


 தா
8
 வ

9
பு
10
தி
 ய
தா
11
 க

பி
ந்


வி


 த


12
 த
று
13
 வா
யா

14
 ம்
15
 து
 க்

சு

16
நா


டை
17
 கா
க்
கி
நா
டா

18
 மா
 லை

Save Answers   Load Answers   Submit Answers   © Hari Balakrishnan - puthirmayam.com

குறுக்காக:
1.மாசிலா சத்துமாவு தரும் மருந்துக்கல். (5)  சிலாசத்து
4.அணிவது முறி. (2) உடை
6.இடம் இடை புகுந்த கழியா? வேலா! (4) கடம்பா  (கம்பா + ட)
7.இடைக் குணம் கொண்ட நரி கயிறாகும். (4) சணம்பு (சம்பு = நரி; சணம்பு = சணல்)
9.முன்பு காணாததாய் நூதன தாகம் முடியவில்லை. (5)
புதிய தாக
12.கொடுப்பாயா ”கேட்க” உற்ற சமயமா? (4) தறுவாயா (தருவாயா, தறுவாயா ”கேட்க ” ஒரே ஒலி)
14.நம் அகம்மது வீடு போனால் நமக்குச் சொந்தம். (4) நம்மது
17.பழுப்பு நூற்பட்டை ஆந்திரத் துறைமுகமானது. (5) காக்கிநாடா
18.11 நெடுக்கு விடை சரமாகும் அந்திப்பொழுது. (2) மாலை

நெடுக்காக:
1.உண்ணத் தொடங்காமல் மாட்ட. (3) (பு சிக்க)
2.சம்பு, பாலா, வணக்கம் தலைவா! (3,2) சலாம்பாபு
3.அதிகாரி உள்ளே வந்துரைத்தார். (2) துரை
4.சாப்பிட முடியாத திங்கள். (3) (திங்கள் = திங்க =உண்ண)
5.கராச்சிக்கு நேர் மேற்கே தண்ணீர்க் கரைகள் தொடர நிலைநாட்டு நகரம். (4) அபுதாபி (அப்பு = தண்ணீர்; தாபி = ஸ்தாபி = நிலைநாட்டு)
7.பாதி ஆற்காட்டு நவாப் கட்டவேண்டிய தொகை. (3) சந்தா
8.(பேச்சு வழக்கில்) வந்தபோது சிவந்தக்கால் உள்ளே கண்டேன். (5) வந்தக்கா
10.பெண் பெயர் சுற்ற விதியா. (3) திவியா
11.சுதி (த) சேர்ந்த கொடிமரமா (கம்பமா)? பூச்சரத்தில் இருப்பதா? (5) கதம்பமா
13.சொல்வேந்தரை உரிமையுடன் அழைக்க விஷம் கக்கிய பாம்பு வரும்! (3) வாசுகி
15.முழங்காலுக்கும் இடுப்புக்கும் இடையே துவட்டு. (2) துடை
16. விரும்பா தேசமா (2) நாடாதிங்கள், 16 டிசம்பர், 2013

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- ஜனவரி

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால்  இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பபார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும்  படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.
வார்த்தைகளைத் தேட இவை உதவலாம் :
http://www.tamilvu.org/library/dicIndex.htm
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/ குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- ஜனவரி

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.உதவியின்றி பாதி அன்னாசி கொடுக்கவா? (5)
4.கண் மயங்க பாதி பிரம்படி பட்ட பெருமாள். (3)
6.பொத்தல் மூட தொடங்காத யாழ்ப்பாணத்தில் பேச. (3)
7.உலகங்களே பரம்பொருள் உள்ளே உடல். (5) (தெரிந்த சொல், தெரியாத பொருள்)
8.ஒன்றுக்கு மேற்பட்ட கையா செய்தி தெரிவிப்பது? (4)
9.விடியும் பொழுது அலை நடுவே சிக்கிய கதர்த்துணி. (4)
12.முச்சந்தி முதலுக்கு கடை முதல் மாற்ற வரும் கோணிப்பை. (5)
14.மெய் நீக்கிய மருந்து காட்டும் மரம். (3)
16.இலையுதிரும் நடுவின் நடுவே வந்த முதல் இளம்பெண். (3)
17.மீண்டுவா! விரைதலை விட்டு திரைமுதல் சேர விரும்பிவா! (5)

நெடுக்காக:
1.அந்தப் பொருளைக் காட்டும் மாமியார். (3)
2.பாதுகாக்கப்பட வேண்டியது போகாதிருக்க சிரி (5)
3.கலை முதல் கொண்ட வாழ்வே வாழ்த்து (4)
4.குறைந்த பேச்சுடன் படைத்தலைவன் சேர்ந்தான். (3)
5.கரிய பாலைக் கொண்டு வெல்லம் எடுப்பர். (5)
8.முன் பின் இல்லாத வாயு ஒரு நோய். (5)
10. ஸ்ரீவாசம் கல்யாணம். (5)
11.நீதியின் கணவர் தீர்ப்பளிப்பார் (4)
13.சூழ்ச்சிக்கு நடுவே 1 சேறு. (3)
15.ஆடையே வருக. அச்சமில்லையா? (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

திங்கள், 9 டிசம்பர், 2013

திரிந்தது தெரிந்தது 1: அக்கு வேறு ஆணி வேறு

பின்னணி:
சில தமிழ்ச் சொற்களுக்கும், பழமொழிகளுக்கும் விளக்கமோ, மூலமோ
சரியாகக் கிடைப்பதில்லை.    என் சிந்தனையில் இந்த மாதிரி சில
சொற்களுக்கும், பழமொழிகளுக்கும் இப்படி (சற்று மாறான, புதிய) விளக்கம் இருக்குமோ என்று தோன்றுகிறது.  அவற்றை இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
உதாரணங்கள்:

1) சில சொற்கள்/சொற்றொடர்கள்:
அக்கு வேறு, ஆணி வேறு
கொள்ளுத் தாத்தா/பாட்டி/ பெயரன்/பெயர்த்தி (பேத்தி)
குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவது
தேரை ஓடின காய்

2) பழமொழிகள்:
அதிகப் படித்த மூஞ்சூறு காடிப்பானையில் விழுந்ததாம்.

அக்கு வேறு, ஆணி வேறு 
சுருக்கமாக:

நாம் மிகச் சாதாரணமாக “அக்கு வேறு ஆணி வேறாகப்” பிரித்து விட்டார் என்று சொல்கிறோம்.  இந்தப் பயன்பாட்டிற்கு வலைத்தளங்களில் சில விளக்கங்கள் இருக்கின்றன.  என் சிந்தனையில், அச்சு வேறு, ஆணி வேறாக”
(ஒரு கடிகாரம், மிதி வண்டி போன்ற) இயந்திரப் பொறிகளைப் பல பாகங்களாக, முக்கியமாக சக்கரங்களின் அச்சாணிகளை, அச்சு வேறு, ஆணி வேறாகப் பிரித்துப்போடுவது என்பது, பேச்சு வழக்கில் “அக்கு வேறு, ஆணி வேறாக”ப் பிரிப்பது என்றாகி விட்டது எனத் தோன்றுகிறது.  கோயம்புத்தூர் வட்டார வழக்கில் அச்சு வேறு, ஆணி வேறாகப் பிரிப்பது என்ற வழக்கு இருப்பதாகவும் அறிகிறேன்.

விரிவாக:

என் சிந்தனையில் தோன்றியதற்கு, பக்க பலமான ஆதாரங்களை, விவரமாகக்
கீழே கொடுத்திருக்கிறேன்.

நாம் மிகச் சாதாரணமாக “அக்கு வேறு ஆணி வேறாகப்” பிரித்து விட்டார் என்று சொல்கிறோம்.  பொதுவாக, இயந்திர சாதனங்களைப் பழுது பார்ப்பவர் அல்லது முற்றிலும் புதுப்பிப்பவர் செய்வதுதான் இவ்வாறு கூறப்படும்.  இலக்கிய விமர்சனம் போன்றவற்றிலும் இச் சொல் வழக்கு பயன் படுத்தப் படுவதைக் காணலாம்.

இந்தச் சொல் வழக்கிற்கான என்னுடைய விளக்கம் சொல்லு முன், முன்னதாக ஏதேனும் விளக்கம் இருக்கிறதா, அகரமுதலியில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்று தேடினேன்.

 அகரமுதலியில் அக்கு என்ற சொல்லிற்கும், ஆணி என்பதற்கும் பொருட்கள் கீழே பார்க்கலாம்:
http://www.tamilvu.org/library/dicIndex.htm
சொல்
அருஞ்சொற்பொருள்
அக்கு எலும்பு ; சங்குமணி ; எருதின் திமில் ; பலகறை ; கண் ; உருத்திராக்கம் ; உரிமை ; எட்டிமரம் .

தமிழ் தமிழ் அகரமுதலி

Searched word ஆணி

இரும்பாணி; அச்சாணி; எழுத்தாணி; மரவாணி; உரையாணி; புண்ணாணி; மேன்மை; ஆதாரம்; ஆசை; சயனம்; பேரழகு; எல்லை.

இங்கு ஒரு தடயமும் கிடைக்கவில்லை.

பிறகு வலைத்தளங்களில் தேடிய பொழுது, இலவசக் கொத்தனாரின் இடுகை
ஒன்றில்தான் விவரமாகப் பேசப்பட்டிருந்தது.  முழு விவரமும் இந்தச் சுட்டியில் பார்க்கலாம்:    http://www.tamilpaper.net/?p=1598
 அந்த இடுகையிலிருந்து, தேவையான ஒரு பகுதி:

இதற்கான விடை நாலாயிரத்திவ்யப்பிரபந்தத்தில் கிடைத்தது.  குறிப்பாக இந்தப் பாடலைப் பாருங்கள்.

வயிற்றில் தொழுவைப் பிரித்து வன்புலச் சேவை யதக்கி
கயிற்றும்அக் காணி கழித்துக் காலிடைப் பாசம் கழற்றி
எயிற்றிடை மண்கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப்
பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே. 

இந்தப் பாடலின் இரண்டாம் வரியில் கயிற்றும் அக்காணி கழித்து அப்படின்னு பாடி இருக்காரு. இதற்கான உரையில் ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார், கயிறு- நரம்பு; அக்கு- எலும்பு, ஆணி- சரீரத்துக்குப் பெயர். ஆணி கழித்தல்- சரீரத்தில் தசையை ஒழித்தல். எலும்பில் இருந்து மொத்தமாக தசைகளை நீக்கும் ஆற்றல் பெற்றவனாய் ஆண்டவனைச் சொல்கிறார். அதாவது ஆதாரம் என்ற பொருட்படும் விதமாக ஆணி என்றால் தசை, எலும்புகளை ஒரு அமைப்பில் நிறுத்தச் செய்யவும் அவற்றை இயக்கவும் தேவைப்படும் தசைகள் என்று சொல்லி இருக்கிறார்.

 இந்த வழி சென்று, அக்காணியை அக்கு+ஆணி எனப் பிரித்து, ஒரு ஆழ்ந்த தத்துவப் பொருள் கொடுத்திருக்கிறார்.

அகராதியில் அக்காணி என்றால் என்ன என்று தேடினால் கிடைப்பது:

(Source: http://glosbe.com/ta/en/)

அக்காணி

Translations into English: Gross, material body 

Tamil-lexicon 

ஸ்தூல சரீரம்

சொல்
அருஞ்சொற்பொருள்
அக்காணி பருவுடல் .

 (Source: http://www.tamilvu.org/library/dicIndex.htm)

மேற்கூறிய திவ்யப்ரபந்தத்தில் வரும் அக்காணி என்ற சொல்லை, அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிக்காமலே, 
“பருவுடல்/ஸ்தூல சரீரம் கழித்து”  
(சூக்கும உடல் கொண்டு) என்று பொருள் கொள்ளலாமே!

********************
அப்படியும் இருக்கலாம் ... இப்படியும் இருக்கலாமோ?

தமிழில் “ச்ச” அல்லது “ட்ச” என்று வடமொழியில் பயன்படுத்தப்படும் சொற்களுக்கு இணையான சொற்களில், ”க்க” என்று வருவதுண்டு.

உதாரணமாக சில:

அக்கம் (p. 2) [ akkam ] {*}, s. terrestrial latitude, பூகோ ளாட்சம்; 2. metal, gold, money, பொன்; 3. கண், eye (http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D&table=fabricius)

அக்கணம் (p. 2) [ akkaṇam ] , அச்சணம், s. (அ dem.) that moment.  (http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D&table=fabricius)

 அக்கரம் (p. 2) [ akkaram ] {*}, அச்சரம், அட்சரம், அக்ஷரம் s. a letter of the alphabet, எழுத்து; 2. a disease of the stomach, thrush.
University of Madras Lexicon

இலச்(ட்)சுமணன்  ==> இலக்குவன்
இலச்(ட்)சணம் ==> இலக்கணம்
இராச் (ட்) சசன் ==> இராக்கதன்
உருத்திராச்சம்  ==> உருத்திராக்கம்
பிய்த்தல் பிடுங்கல் ==> பிச்சல் பிடுங்கல் ==> பிக்கல் பிடுங்கல்

இந்த இடத்தில் இன்னொன்றையும் கவனிப்போம்:

அச்சாணி (கடையாணி) என்ற சொல்லை “அச்சு”+ “ஆணி” என்று பிரிக்கலாம்.
அச்சாணி கடையாணி , ஊர்திகளின் இருசில் சக்கரம் கழலாமல் செருகப்படும் ஆணி .

அச்சு என்றால் என்ன?
தமிழ் அகரமுதலியிலிருந்து:
சொல்
அருஞ்சொற்பொருள்
அச்சு அடையாளம் ; உயிரெழுத்து ; வண்டியச்சு ; எந்திரவச்சு ; கட்டளைக்கருவி ; உடம்பு ; வலிமை ; அச்சம் ; துன்பம்


Axle n. இருசு, சக்கரத்தின் அச்சு. (http://www.dictionary.tamilkalanjiyam.com)

இவையெல்லாம் ஒன்று சேர்த்துப் பார்க்கையில், 
அச்சு வேறு,  ஆணி வேறாகப்   
பிரிப்பதுதான்
பேச்சு வழக்கில்  “அக்கு வேறு, ஆணி வேறு”
என்று மருவி வந்திருக்கும்  
எனத் தோன்றுகிறது.Muthu'sAmazonHealth

வெள்ளி, 6 டிசம்பர், 2013

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2013- டிசம்பர்

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால்  இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பபார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும்  படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.
வார்த்தைகளைத் தேட இவை உதவலாம் :
http://www.tamilvu.org/library/dicIndex.htm
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/ குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2013- டிசம்பர்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.மாசிலா சத்துமாவு தரும் மருந்துக்கல். (5)
4.அணிவது முறி. (2)
6.இடம் இடை புகுந்த கழியா? வேலா! (4)
7.இடைக் குணம் கொண்ட நரி கயிறாகும். (4)
9.முன்பு காணாததாய் நூதன தாகம் முடியவில்லை. (5)
12.கொடுப்பாயா ”கேட்க” உற்ற சமயமா? (4)
14.நம் அகம்மது வீடு போனால் நமக்குச் சொந்தம். (4)
17.பழுப்பு நூற்பட்டை ஆந்திரத் துறைமுகமானது. (5)
18.11 நெடுக்கு விடை சரமாகும் அந்திப்பொழுது. (2)

நெடுக்காக:
1.உண்ணத் தொடங்காமல் மாட்ட. (3)
2.சம்பு, பாலா, வணக்கம் தலைவா! (3,2)
3.அதிகாரி உள்ளே வந்துரைத்தார். (2)
4.சாப்பிட முடியாத திங்கள். (3)
5.கராச்சிக்கு நேர் மேற்கே தண்ணீர்க் கரைகள் தொடர நிலைநாட்டு நகரம். (4)
7.பாதி ஆற்காட்டு நவாப் கட்டவேண்டிய தொகை. (3)
8.(பேச்சு வழக்கில்) வந்தபோது சிவந்தக்கால் உள்ளே கண்டேன். (5)
10.பெண் பெயர் சுற்ற விதியா. (3)
11.சுதி சேர்ந்த கொடிமரமா? பூச்சரத்தில் இருப்பதா? (5)
13.சொல்வேந்தரை உரிமையுடன் அழைக்க விஷம் கக்கிய பாம்பு வரும்! (3)
15.முழங்காலுக்கும் இடுப்புக்கும் இடையே துவட்டு. (2)
16.விரும்பா தேசமா. (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

புதன், 4 டிசம்பர், 2013

சொல்கலை - முத்து 47

ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்
அமைக்கப்பட்டபுதிர்.

சொல்கலை - முத்து  46  விடைகளை பக்கக் கடைசியில் பார்க்கவும்

முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்:   

http://muthuputhir.blogspot.com/2012/05/5.html

புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்;  காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.
1.
2.
3.
4.
5.
6.


காசியில் விசாலாட்சி மதுரையில் மீனாட்சி இவர்களுக்குச் சமமானவள்!


”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும்.  அதைப் படிவம் எடுத்து,  பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும்.  பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.

நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-
http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

சொல்கலை - முத்து  46 விடைகள்:


1) சந்தனக் காற்று 2) பொறுத்தது போதும் 3) வேலுண்டு வினையில்லை 4) நல்லவன் 5) தாயகம்
இறுதி விடை: காவியத் தலைவன்

 
உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 9 பேர்):
ராமராவ், சாந்தி, வைத்தியநாதன், நாகமணி ஆனந்தம், 10அம்மா, சௌதாமினி சுப்ரமணியன், நாகராஜன், தமிழ் முகில் பிரகாசம், மீனாக்ஷி சுப்ரமணியன்                
இவர்கள் எல்லோரும் எல்லா விடைகளும் சரியாகக் கண்டுபிடித்திருந்தனர். அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.   

 

 

செவ்வாய், 3 டிசம்பர், 2013

கலைமொழி -முத்து 47

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு  உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்.

இந்தச் சிறு கதையைப் படிக்கவும்:


ஒரு மத போதகர், " ’பொய் சொல்லுவது பாவம்’ என்பது பற்றி அடுத்த வாரம் போதிக்க திட்டமிட்டிருக்கிறேன். நீங்கள் அனைவரும் மார்க் 17 (Mark 17) படித்துவிட்டு வர வேண்டும். அது  என் பிரசங்கத்தை நீங்கள்  புரிந்து கொள்ள உதவும்."என்றார்.


அடுத்த ஞாயிறு பிரசங்கம் வழங்கு முன் அவர் ‘ மார்க் 17 படித்தவர்கள் கையைத் தூக்குங்கள்’ என்றார்.


அனைவரும் கையைத் தூக்கினர்.

போதகர் சிரித்துக் கொண்டே கூறினார்:

மேலே நடந்தது என்ன?  இங்கு மறைந்திருக்கும் செய்தியைக் கண்டு பிடித்தால் தெரியும்!

”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.


ஓர் உபாயம்!
ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே  உள்ள வார்த்தையைக்  கண்டுபிடிக்க முயலவும்.  இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால்,  மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்!
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள    
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 46 விடை:  
 

வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை. 
வான் மதியும் மீனும் கடல் காற்றும் 
மலரும் மண்ணும் கொடியும் சோலையும் 
நதியும் மாறவில்லை. மனிதன் மாறிவிட்டான். 
"பாவ மன்னிப்பு”  திரைப்படத்தில் வரும் பாட்டு

 

பங்கேற்று விடை அளித்தவர்கள் (மொத்தம் 6 பேர் ) 


ராமராவ், பவளமணி பிரகாசம், வைத்தியநாதன், ராமையா, மீனாக்ஷி சுப்ரமணியன், நாகராஜன்.

  அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள். 

பின்பற்றுபவர்கள்