Posts

Showing posts from November, 2017
குட்டிக் குறுக்கெழுத்துப்  புதிர் -- நவம்பர் 2017 குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. முதல் வருகையா? இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்:  http://muthuputhir.blogspot.com/2015/06/blog-post.html   1. கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது.  2. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்