வியாழன், 11 அக்டோபர், 2012

வழிமொழி - முத்து 1

கீழ்க்காணும் எழுத்துக்களைக் கொண்டு  மறைந்திருக்கும்  செய்தி (சொற்றொடர் , பழமொழி/பாடல் வரிகள்/உரையாடல்) என்னவென்று கண்டுபிடிக்கவேண்டும்.

  யோசனைகள்:   

செய்ம்முறை:

மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்ட எழுத்தில் தொடங்கி எட்டு திசைகளில் ஒன்றில் பயணித்து ஒவ்வொரு எழுத்தாக அனைத்து எழுத்துகளையும் சரியானபடி சேர்த்துக்கொண்டே வந்தால் மறைந்துள்ள செய்தி வெளிப்படும்..

 இரு எழுத்துகளுக்கு நடுவே சிறிது சக்கரத்தின் பல் போல நீட்டிக்கொண்டிருப்பவற்றை சொடுக்கினால் அவை இணைக்கப் படும்.  மீண்டும் சொடுக்கினால் அவை துண்டிக்கப்படும்.  அடுத்தடுத்த எழுத்துக்கள், எந்தத் திசையிலும் இருக்கலாம்.  எல்லா எழுத்துக்களையும் சரியானபடி சேர்த்துக்கொண்டே வந்தால் மறைந்துள்ள செய்தி வெளிப்படும்.  அதைக் காப்பி செய்து இமெயிலிலோ, கமெண்ட் பாக்சிலோ  அனுப்பலாம்.

கவனிக்கவும்:

1.  எக்ஸ்ப்ளோரரில் தற்சமயம் வேலை செய்யாது.
2.  எல்லா எழுத்துக்களும் ஒன்றுடன் ஒன்று சேர்க்கப்படிருந்தால்தான் இறுதி விடை அங்கீகரிக்கப் படும்!  ஒரு சொல்லின் கடைசி எழுத்தும், அடுத்த சொல்லின் முதல் எழுத்தும் கூட இணைக்கப் பட வேண்டும்.
3.  மூலைகளில், பக்கவாட்டுகளில் அருகே உள்ள எழுத்துகள் குறைவாக இருப்பதால் கொஞ்சம் எளிதாக வார்த்தைகளை கண்டுபிடிக்க இயலும். மேலும் கீழே உள்ள கோடிட்ட இடங்களைக் கொண்டு வார்த்தைகளின் நீளத்தை கணக்கிட்டுக்கொண்டால் கண்டுபிடிப்பது எளிதாக அமையும்.


இந்த வகைப் புதிரை நீங்களும் வடிவமைக்கலாம்! இங்கே கிளிக் செய்யவும்

1 கருத்து :

 1. விடை கண்டுபிடித்து ஊக்கம் அளித்தவர்கள்: ஹுஸைனம்மா
  யோசிப்பவர்
  Rajesh Durairaj
  நாகராஜன்
  Ramarao
  shanthi
  Madhav

  கருத்துக்களுக்கு நன்றி. தெரிந்த குறள் என்பதால் மிக எளிதாக அமைந்து விட்டது என்று அறிகிறேன். விடையைக் காப்பி செய்ய முடியாமை விரைவில் சரிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறேன். அது வரை, விடையை மீண்டும் “டைப்” செய்து அனுப்ப வேண்டியிருக்கும்.
  அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

பின்பற்றுபவர்கள்