வியாழன், 28 மார்ச், 2013

ஆனா_ஆவன்னா (நவ) சுடோகு: சரம் 1

 இதழ் 9-ல் 1

கீழ்க் காணும் சுட்டியில் தமிழ் எழுத்துக்களைக் கொண்ட சுடோகு
புதிர் இருக்கிறது.   எண்களுக்குப் பதில், கீழ்க் காணும் ஒன்பது
எழுத்துக்களைக் கட்டங்களில் நிரப்பவேண்டும்:

பெ  ம்   மை  மே  லு  யி  ரு  ல்  லை

இது இந்த வரிசையில் முதல் புதிர்.  தொடர்ந்து இன்னும் 8 வரும்.  

ஒவ்வொன்றிலும் ஒரு வரிசையில் (குறுக்கு அல்லது நெடுக்கு) 
ஒன்றிரண்டு தமிழ்ச் சொல்/ற்கள் ஒளிந்திருக்கும்.  
ஒன்பதையும் முடித்தால், கிடைத்த சொற்களைக் கொண்டு 
ஒரு வாக்கியம் அமைக்க வேண்டும். 

சுடோகு விதிகள்:

1.  ஒவ்வொரு குறுக்கு வரிசையிலும் இந்த ஒன்பது எழுத்துக்களும் இருக்க வேண்டும்.

2.  ஒவ்வொரு எழுத்தும் ஒரே ஒரு முறை தான் இருக்க வேண்டும்.

3.  அதே போல் ஒவ்வொரு நெடுக்கு வரிசையிலும் அமைய வேண்டும்.

4.  9 க்கு 9 பெரிய சதுரத்தினுள் 3 க்கு 3 சிறிய சதுரங்கள் 9 இருப்பதைக் காணவும்.  இந்த ஒவ்வொரு சிறிய கட்டங்களிலும் முன் சொன்னது போல் 9 எழுத்துக்களும் அமைய வேண்டும்.


http://tinyurl.com/navasudoku191

புதிரை பேப்பரில் படிவம் எடுத்துச் செய்யலாம்.

கூகிள் (ஜி மெயில்) drive இல் அல்லது spread sheet-ல் படிவம் எடுத்துச்
செய்தால் எளிதாக இருக்கும்.  இந்தப் புதிரை அப்படியே உங்கள் கூகிள் டிரைவில் படிவம் எடுத்துக் கொள்ள முடியும்.

உங்கள் விடையை உரை வடிவமாக (text) , கட்டங்கள் இன்றி 9x9 எழுத்துக்கள் மட்டும் அனுப்பினால் போதும்.

விடையைப் பின்னூட்டம் மூலமோ, மின்னஞ்சல் (inamutham@gmail.com)
மூலமோ அனுப்பலாம்.   மற்ற சுடோகுப் பிரியர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
தமிழ் எழுத்துருவுக்குப் (font)  பதில் உரோமன்  எழுத்துருக்கள் (Roman Script)
பயன் படுத்துவதாக இருந்தால், கீழ்க்கண்ட எழுத்துப் பெயர்ப்பு முறையைப் (Transliteration Scheme) பயன்படுத்தவும்.

Transliteration scheme:பெ  = pe;  ம்  = m;   மை = mai;   மே = mE;   லு = lu;  யி  = yi;  ரு = ru;   ல்  = l;  லை = lai

இது இந்த வரிசையில் முதல் புதிர்.  தொடர்ந்து இன்னும் 8 வரும்.  ஒவ்வொன்றிலும் ஒரு வரிசையில் (குறுக்கு அல்லது நெடுக்கு) ஒன்றிரண்டு தமிழ்ச் சொல்/ற்கள் ஒளிந்திருக்கும்.  ஒன்பதையும் முடித்தால், கிடைத்த சொற்களைக் கொண்டு ஒரு வாக்கியம் 
அமைக்க வேண்டும். 

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

2 கருத்துகள் :

 1. ராமச்சந்திரன்:

  விடை கிடைத்தது. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. கமல் பாலன்:

  விடை கிடைத்தது. பாராட்டுக்கள்.
  மறைந்திருக்கும் சொல்/சொற்கள் என்ன?

  பதிலளிநீக்கு

பின்பற்றுபவர்கள்