Posts

Showing posts from June, 2014

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- மே : விடைகள்

Image
குறுக்காக: 1. மைத்துனர் சொந்தக்காரி தனக்கார்ந்த நீக்கிய உடைமைப் பாத்தியதை. (5) (கரந்துறைமொழி/anagram)    மைத்துனர் சொந்தக்காரி - தனக்கார்ந்த = மைத்துசொரி ==> சொத்துரிமை (= உடைமைப் பாத்தியதை) 4. இடை குறைந்தாலும் வளர்ந்தாலும் இசைக்குத் தாய். (3)(ஒரு பொருள், பன்மொழி) சுருதி  (சுருதி = சுதி : இசைக்கு சுருதி தாய், தாளம் தந்தை) 6. வெற்றிடத்தின் நடுவே குபேரன் நுழைந்து வெளிக்கொணர்ந்தான் பாரதியின் கண்ணம்மா. (3)(அகராதி)  வெற்றிடம் = காலி; த = குபேரன் பாரதியின் கண்ணம்மா என் காதலி பார்க்க: http://www.tamilvu.org/library/dicIndex.htm சொல் அருஞ்சொற்பொருள் த ஒர் உயிர்மெய்யெழுத்து (த்+அ) ; குபேரன் ; நான்முகன் ; தைவதமாகிய விளரியிசையின் எழுத்து 7.திருவண்ணாமலை மாவட்ட ஊர் வருகைதந்த சிவா திரும்பி கொடுப்பதை நீக்கிவிட்டார். (5) (கரந்துறைமொழி)  வருகை தந்த சிவா - தருகை =வந்தசிவா ==>வந்தவாசி 8.பாட்டி? இல்லை. பெண்பெயர்! (4)  தாயம்மா 9. கட்சித் தலைவர் தவம் செய்ய வழி மூடித் திறப்பது. (4)  கட்சித் தலைவர் = க; கதவம் = வழி