பாரதிகலை - 1
கலைமொழி, மனு அறிமுகப்படுத்திய ஒரு சுவாரசியமான விளையாட்டு. மிக நன்றாக இருக்கிறதே நாமும் போடுவோமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே,யோசிப்பவர், புதிரமைக்கவும், வலைப்பக்கத்திலேயே விடுப்பதற்கும் அருமையான ஒரு மென்பொருளை உருவாக்கி விட்டார். இருவருக்கும் நன்றிகள் பல! -- ”பூங்கோதை”
இம்முயற்சியில் “யோசிப்ப்பவர்”, ”பூங்கோதை” மற்றும் “அம்மா” எனக்கு முன்னோடிகளாக வழிகாட்டினார்கள். இவர்களுக்கும் என் நன்றிகள்!
இதில் என் முயற்சியாக மகாகவி பாரதியின் பாடல்களிலிருந்து சில வரிகளை நினைவு படுத்த எண்ணி இருக்கிறேன். முதல் முறையாக பாரதி மனத்திற்குக் கட்டளை இடு முகமாகப் பாடியதைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். இது என் கன்னி முயற்சி. உங்கள் அபிப்ராயங்களும், மேலும் சீர்படுத்த வழிமுறைகளும் தந்து ஆதரிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
பாரதியார் பாடல் தொகுப்பு கைவசமில்லாவிட்டால், இங்கே பார்க்கவும்:
http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/index.asp
வழிமுறை
கீழே உள்ள கட்டங்களில் ஒரு பத்தியோ பாடலோ நெடுக்காக மட்டும் கலைந்துள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் கொண்டதாகவும் இருக்கலாம். கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளை குறிக்கின்றன. அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்ற முடியும்.எழுத்துக்களை மெல்ல தட்டித் (click) தட்டி இப்பக்கத்திலேயே புதிரை அவிழ்க்கலாம்.
உங்கள் விடையை "comment” மூலமாகவோ அல்லது மின் அஞ்சல் (inamutham@gmail) மூலமாகவோ அனுப்பலாம்.
Comments
Post a Comment