கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

புதிர் அமைப்பும் குறிக்கோளும்:

கட்டங்களில் ஒரு செய்தி கலைத்துக் கொடுக்கப்படும்.   ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் இருக்கலாம்.  நெடுக்காக மட்டும் கலைத்துக் கொடுக்கப்படும். கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளை குறிக்கும்.   அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும்,   அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

முக்கியக் குறிப்புகள்:(முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு)  

   
1.  இறுதி விடை இடமிருந்து வலமாகப் படிக்கப்படும்.    
 2.  நெடுக்காக (மேலிருந்து கீழ்) எந்த எழுத்தும் எந்த இடத்திற்கும் மாற்றப் படலாம்; இடையில் உள்ள வெற்றுக்    கட்டங்களைத்  தாண்டியும்  மாற்றப்படலாம்.    
3. இந்த வகைப் புதிர்களை விடுவிக்க,  அடிப்படைத் தமிழ் இலக்கண அறிவே போதும்.  உதாரணமாக, மெய்  எழுத்துக்களும், சில உயிர்மெய் எழுத்துக்களும் சொல் முதலில் வாரா.   அதே போல் உயிர் எழுத்துக்கள் சொல் இடையிலும், கடைசியிலும் வாரா.    
 4.   வெற்றுக் கட்டங்களுக்கு இடையே இருக்கும் சொற்களைக் கண்டுபிடித்து விட்டால் மொத்தச் செய்தியும் அநேகமாகத் தெரிந்து விடும்!

*******************************************************************************

கவி/செய்யுள்/பாடல் வகைகள் இவைகள் செய்யுள் வடிவத்திலிருந்து சற்று மாற்றி அமைக்கப் படும். பாடல் அறிமுகம் இல்லாதவர்களும், தமிழ் மொழியின் அடிப்படை இலக்கண விதிகளை மனதிற் கொண்டு விடையைக் கண்டு பிடிக்க இது உதவும்.
உதாரணம்: (பார்க்க: திருக்குறள் 191: அதிகாரம் 20. பயனில சொல்லாமை)
செய்யுள் வடிவம்:
பல்லார் முனியப் பயனில சொல்லுவானெல்லாரு மெள்ளப் படும்

புதிருக்காக மாற்றப்பட்ட வடிவம்:
பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்

Comments

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!

    வலைச்சர தள இணைப்பு : கல்வி எது? - கரைத்துக் குடிப்பதுவா? கற்று உணர்வதுவா?

    ReplyDelete
  2. வருகைக்கும், வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியமைக்கும் நன்றி. கிரேஸ் அவர்களுக்கும் நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எழுத்து சுடோகு - திரைப்படம் கேஎஸ்ஜி-முத்துராமன்

பாரதிகலை - 4