மைத்துனர் குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- மே

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- மே

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
படிவம் எடுத்து புதிரை விடுவிக்கத் தோதான உருவத்திற்கு: http://tinyurl.com/MuthuMayXwd


குறுக்காக:
1. மைத்துனர் சொந்தக்காரி தனக்கார்ந்த நீக்கிய உடைமைப் பாத்தியதை. (5) (கரந்துறைமொழி/anagram)
4. இடை குறைந்தாலும் வளர்ந்தாலும் இசைக்குத் தாய். (3)(ஒரு பொருள், பன்மொழி)
6. வெற்றிடத்தின் நடுவே குபேரன் நுழைந்து வெளிக்கொணர்ந்தான் பாரதியின் கண்ணம்மா. (3)(அகராதி)
7.திருவண்ணாமலை மாவட்ட ஊர் வருகைதந்த சிவா திரும்பி கொடுப்பதை நீக்கிவிட்டார். (5) (கரந்துறைமொழி)
8.பாட்டி? இல்லை. பெண்பெயர்! (4)
9. கட்சித் தலைவர் தவம் செய்ய வழி மூடித் திறப்பது. (4)
12.வருமுன் மறைந்த தக்கவன் மகள். (5) (ஹிந்து புராணம்))
14.மேன்மைதங்கிய கொம்பிழந்தால் தண்ணீர் செலுத்தும் மடை. (3) (அகராதி)
16.உயிரற்ற உப்புமா சிதறி விட்டதால் கேட்கிறேன் மன்னிப்பு. (3)(anagram; பேச்சு வழக்கு)
17.மந்திரிகுமாரி புகழ் நடிகை உளைக்கத் தவிர்த்து மாதுளை உரித்தே விக்க வந்தார். (5)(திரை ஞானம் உதவும்; அவசியமில்லை)

நெடுக்காக:
1.மேலாடை அழகா?! (3) (ஒருசொல் பன்மொழி)
2.சரி சமான எடைசொல்லியதும் தொடக்கம் மறந்தது. (5) (கரந்துறைமொழி/anagram)
3.வழுவற்ற வழுவமைதி தானாக இடை நுழைந்து குழம்பிய நடிகையர் சகோதரிகளில் இளையவர் (4) (கரந்துறைமொழி; திரை ஞானம் உதவும்; அவசியமில்லை)
4.தூய பரிசுத்த குதிரை மறைந்தது (3)
5.பரிதி சித்திரம் பத்தி குறை சொல்ல கலங்கி நிற்கும் ஊர். (5)(கரந்துறைமொழி)
8.பெற்றவள் பற்றுக்கோடா? பெற்றவளா? கட்டினவளா? (2,3) (சிலேடை)
10.மர்ம புதரில் ஓரங்கள் நீக்கி உருக்குலைந்து நிற்கும் ஊர். (5) (கரந்துறைமொழி)
11.அளவா கருகுமணி சரமா ஓரங்களில் எடு. (4)
13. கோயிலுக்கு வெளியே புளி சாதம் பொன்னாகும். (3)(அகராதி தேவை)
15.குழந்தை காட்டும் பதவி பார்க்காமல் பழகு விதம்! (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக
படிவம் எடுத்து புதிரை விடுவிக்கத் தோதான உருவத்திற்கு: http://tinyurl.com/MuthuMayXwd

Comments

  1. திரு. நாகராஜன் சொன்னது:
    coming to your cross word this month, it's an exceptional one. Was finding it difficult to start with and once I find some answers then I was able to find all of them correctly I think. Let me know if my answers are right. Liked so many of the clues and the ones listed below are the ones I liked very much.
    Across: 1, 4, 7, 8 (nice one), 9 (learned a new word)
    Down: 1, 5, 8, 13 (learned a new meaning for this word)

    ReplyDelete
  2. திரை ஞானம் அல்ல, தொன்ம ஞானம் :)

    ReplyDelete
  3. பூங்கோதை அவர்கள் கூறியது:
    திரை ஞானம் அல்ல, தொன்ம ஞானம் :)

    முத்துசுbரமண்யம் கூறும் பதில்:

    தொன்ம திரை ஞானம்?

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. திரு. ராமராவ் கூறியது:

    1 நெடு: சொக்கா என்ற விடைக்கு கொடுத்த குறிப்பு சரியல்ல என்பது எனது கருத்து. சொக்காய் மேலாடை சரி. ஆனால் சொக்கன் என்றால் சிவனை மட்டும் தான் குறிக்கும். கந்தனை அல்ல. சொக்கன் என்றால் அழகன் என்று ஒரு பொருள் உண்டு தான். ஆனாலும் கந்தா என்று சொல்லியிருப்பது சரியல்ல என்பது என் கருத்து.

    15 குறு: பதம் பார்க்காமல் என்றிருக்க வேண்டுமே. பதவி என்றிருக்கிறதே.

    XXXXXXXXXXXXXXXX

    கருத்துக்களுக்கு நன்றி.

    1. தவறைத் தெரிவித்ததற்கு நன்றி. இவ்வாறு திருத்தி இருக்கிறேன்: 1.மேலாடை அழகா?! (3) (ஒருசொல் பன்மொழி).
    2. http://www.tamilvu.org/library/dicIndex.htm

    அருஞ்சொற்பொருள்
    பதம்: பக்குவம் ; உணவு , சோறு ; ................................ ; பதவி ; தெய்வபதவி ; ................; இசைப்பாட்டுவகை .

    நன்றியுடன், முத்துசுbரமண்யம்

    ReplyDelete

  6. Hello Sir, very nice crossword, I loved the pulisaadam clue. :) should 15 down read as "பதம் பார்க்காமல்"? Thank you again for an interesting puzzle,
    Poongothai

    xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


    Hello Ma'am, Welcome back! All your answers are correct. Congratulations! Thanks for your compliments and glad you enjoyed it.


    I used this information below intentionally said "பதவி". http://www.tamilvu.org/library/dicIndex.htm அருஞ்சொற்பொருள் பதம் பக்குவம் ; உணவு , சோறு ;xxxxxxxxxxxxx ; பதவி ; தெய்வபதவி ; xxxxxxx முத்துசுப்ரமண்யம் on குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- மே

    ReplyDelete
  7. அன்பின் ஐயா..
    இன்று தங்களின் தளம் - தமிழ் முகில் பிரகாசம் அவர்களால் -
    வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_11.html
    தகவல் அறிந்து வந்தேன்.. உற்சாகமாக இருக்கின்றது. நானும் முயற்சிக்கின்றேன்..
    நன்றி..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2