Friday, May 31, 2013

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_6 விடைகள்
குறுக்காக:
4.கழுத்தின் பின் பிசாசுத் தலை கொண்ட கிரிக்கெட் வீரர். (5)   கண்டம்பி
5.மாலைமுரசு வெளியே பார்த்தால் குற்றம் (2) மாசு
9.விளக்குமாறும் இறுதியில் வேற்றுரு அடையும் (3)   மாறும்
7.கொடுத்த பெட்டி யானைப் பல்லால் ஆனது (6)  தந்தப்பேழை
10.நாக்கு என்ன சொல்லிக் குளறும் தற்பெருமையாளர் தாரக மந்திரம் (2,4) நான் எனக்கு
11.சொல்வேந்தர் சிவம் நீக்கி அனுபவி (2) சுகி
12.தேசமும் விரும்பும் (3) நாடும்
13.தலை வெட்டி நெடுநாள் வாழ்வர் (5) சிரஞ்சீவி

நெடுக்காக:
1.அப்பம் விட்ட வேண்டுகோள் தலைக்கு மேல் (2) விண்
2." சம்பத்து மதமானது பத்து போனால் உடன்பாடானது (7)  சம்மதமானது
3.பேறும் வெச்சு தலை மாற்றுதல் வீண் வார்த்தை (6) வெறும்பேச்சு
6.தோன்றும் இளைஞன் சாத்தனாரின் மணிமேகலையைக் காதலித்தான் (7) உதயகுமாரன்
8.பம்பரம் செய்வது கழன்றா விடும்? கவியை நீக்கி சுதா தலைமை சேர் (6) சுழன்றாடும்
14.சீதாராமை விண்மீன் தரச் சொன்னால் மிஞ்சுவது மேலை நாடு (2) சீமை

பங்கு கொண்டு ஆதரித்தவர்கள் (10 பேர்):
யோசிப்பவர், ராமராவ், பார்த்தசாரதி, ராமையா, பூங்கோதை, வைத்தியநாதன், நாகராஜன், பாலகிருஷ்ணன்,சௌதாமினி சுப்ரமண்யம், மீனாக்ஷி சுப்ரமணியன்   

அனைவரும் சரியான விடைகள் அனுப்பீருந்தனர்.  அனவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்.         

பின்னூட்டங்கள்:
Parthasarathy Srinivasan     May 10
HelloInteresting clues and a nice puzzle again. But was relatively easyby your past standard. There were errors in the numbering in (குறுக்காக: 10 (should be 2,4), 13 (should be 5)

யோசிப்பவர்:  May 10
சுழன்றாடும் - சூப்பர் சொல்லாடல்!! :)

பூங்கோதை:   May 10
நாடும், சிரஞ்சீவி - அருமை!
அனத்துக் குறிப்புகளே மிகவும் ரசிக்கும் படி இருந்தன. 


நாகராஜன்:  May 13
 
நெடுக்கு 1-க்கான பதில் "விண்" - அருமையான குறிப்புங்க சார். (விண்ணப்பம் - அப்பம் = விண்)  

சசி பாலு:  மே 13

தாங்கள் குறிப்பிட்டிருந்த படி அதிக மாக அறிவை பயன்படுத்தவில்லை.  எந்த சுவடியையும் புரட்டவில்லை.   ஆனால் அதிகம் ரசித்தது கழுத்தின் பின் பிசாசு தலை.  ஏனெனில் நிறைய  வீரர்களுக்கு நீள் முடி உள்ளது. 

Saturday, May 25, 2013

சொல்கலை - முத்து 44

ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்
அமைக்கப்பட்டபுதிர்.

சொல்கலை - முத்து  42  விடைகளை பக்கக் கடைசியில் பார்க்கவும்

முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html

புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்;  காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.1.
2.
3.
4.


அதிக மணம் தருமோ?

”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும்.  அதைப் படிவம் எடுத்து,  பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும்.  பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.

நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-
http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

சொல்கலை - முத்து  43 விடைகள்:


1) அதிராமபட்டினம்  2) வந்தவாசி  3) செங்கல்பட்டு  4) விருத்தாசலம்     இறுதி விடை:  செல்வி அமராவதி
 
உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 7 பேர்): Anandhi Selva, நாகராஜன், ராமராவ், வைத்தியநாதன், சாந்தி, பாலசந்திரன், 10அம்மா                     

 
 இவர்கள் எல்லோரும் எல்லா விடைகளும் சரியாகக் கண்டுபிடித்திருந்தனர். அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.  

Friday, May 24, 2013

கலைமொழி -முத்து 36

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்.

ஓர் உபாயம்!


ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே  உள்ள வார்த்தையைக் கண்டுபிடிக்க முயலவும்.  இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால், மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்! ”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 35 விடை:  
  (சுஜாதா வின்  “கற்றதும் பெற்றதும் “ தொகுப்பிலிருந்து))
சௌரிராஜ ஐயங்கார் ஆங்கிலத்தையும் தமிழில்தான் போதித்தார். ஆங்கிலத்தில் சில நல்ல வார்த்தைகளும் தமிழில் பல கெட்ட வார்த்தைகளும் அவரிடமிருந்துதான் கற்றேன்.
சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம் 9  பேர் ) 
ராமராவ்,  ராகவேந்திரன், ராமையா, வைத்தியநாதன், யோசிப்பவர், ரமேஷ் சுந்தரம், நாகராஜன், மீனாக்ஷி சுப்ரமணியன், 10அம்மா       
அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்.    

Thursday, May 9, 2013

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_6

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தைப் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.
வார்த்தைகளைத் தேட இவை உதவலாம் :
http://www.tamilvu.org/library/dicIndex.htm
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/


அச்செடுக்கத் தோதான (Printer-friendly) படிவம் இங்கு உள்ளது:
http://tinyurl.com/xword2013-6

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
4.கழுத்தின் பின் பிசாசுத் தலை கொண்ட கிரிக்கெட் வீரர். (5)
5.விளக்குமாறும் இறுதியில் வேற்றுரு அடையும் (3)
7.மாலைமுரசு வெளியே பார்த்தால் குற்றம் (2)
9.கொடுத்த பெட்டி யானைப் பல்லால் ஆனது (6)
10.நாக்கு என்ன சொல்லிக் குளறும் தற்பெருமையாளர் தாரக மந்திரம் (2,4)
11.சொல்வேந்தர் சிவம் நீக்கி அனுபவி (2)
12.தேசமும் விரும்பும் (3)
13.தலை வெட்டி நெடுநாள் வாழ்வர் (5)

நெடுக்காக:
1.அப்பம் விட்ட வேண்டுகோள் தலைக்கு மேல் (2)
2." சம்பத்து மதமானது பத்து போனால் உடன்பாடானது (7)
3.பேறும் வெச்சு தலை மாற்றுதல் வீண் வார்த்தை (6)
6.தோன்றும் இளைஞன் சாத்தனாரின் மணிமேகலையைக் காதலித்தான் (7)
8.பம்பரம் செய்வது கழன்றா விடும்? கவியை நீக்கி சுதா தலைமை சேர் (6)
14.சீதாராமை விண்மீன் தரச் சொன்னால் மிஞ்சுவது மேலை நாடு (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Wednesday, May 1, 2013

சொல்கலை - முத்து 43

ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்
அமைக்கப்பட்டபுதிர்.

சொல்கலை - முத்து  42  விடைகளை பக்கக் கடைசியில் பார்க்கவும்

முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html

புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்;  காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம். 
அச்செடுக்கத் தோதான பிரதி: http://tinyurl.com/solkalai43

1.
2.
3.
4.


மரியாதை மிகுந்த சக மாணவிக்கு நண்பர்கள் வைத்த பெயர்?

”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும்.  அதைப் படிவம் எடுத்து,  பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும்.  பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.

நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-
http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

சொல்கலை - முத்து  42 விடைகள்:

1) தனிப்பிறவி  2) கத்திரிக்காய்  3) கொய்யாப்பழம்  4) பொன்னாங்கண்ணி  5) மந்திரிகுமாரி  6) குத்துவிளக்கு  இறுதி விடை: கன்னியா குமரி
 
உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 9 பேர் ):

anonymous, நாகராஜன், 10அம்மா, வைத்தியநாதன், சௌதாமினி சுப்ரமண்யம், ராமையா, ராமராவ், சாந்தி, மீனாக்ஷி சுப்ரமணியன்               

 
 இவர்கள் எல்லோரும் எல்லா விடைகளும் சரியாகக் கண்டுபிடித்திருந்தனர். அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.  

ஜனவரி 2020 - வாரம் 2 குறுக்கெழுத்துப் புதிர்: வீணை மீட்ட

வீணை மீட்ட This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an Engl...