குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_6 விடைகள்




குறுக்காக:
4.கழுத்தின் பின் பிசாசுத் தலை கொண்ட கிரிக்கெட் வீரர். (5)   கண்டம்பி
5.மாலைமுரசு வெளியே பார்த்தால் குற்றம் (2) மாசு
9.விளக்குமாறும் இறுதியில் வேற்றுரு அடையும் (3)   மாறும்
7.கொடுத்த பெட்டி யானைப் பல்லால் ஆனது (6)  தந்தப்பேழை
10.நாக்கு என்ன சொல்லிக் குளறும் தற்பெருமையாளர் தாரக மந்திரம் (2,4) நான் எனக்கு
11.சொல்வேந்தர் சிவம் நீக்கி அனுபவி (2) சுகி
12.தேசமும் விரும்பும் (3) நாடும்
13.தலை வெட்டி நெடுநாள் வாழ்வர் (5) சிரஞ்சீவி

நெடுக்காக:
1.அப்பம் விட்ட வேண்டுகோள் தலைக்கு மேல் (2) விண்
2." சம்பத்து மதமானது பத்து போனால் உடன்பாடானது (7)  சம்மதமானது
3.பேறும் வெச்சு தலை மாற்றுதல் வீண் வார்த்தை (6) வெறும்பேச்சு
6.தோன்றும் இளைஞன் சாத்தனாரின் மணிமேகலையைக் காதலித்தான் (7) உதயகுமாரன்
8.பம்பரம் செய்வது கழன்றா விடும்? கவியை நீக்கி சுதா தலைமை சேர் (6) சுழன்றாடும்
14.சீதாராமை விண்மீன் தரச் சொன்னால் மிஞ்சுவது மேலை நாடு (2) சீமை

பங்கு கொண்டு ஆதரித்தவர்கள் (10 பேர்):
யோசிப்பவர், ராமராவ், பார்த்தசாரதி, ராமையா, பூங்கோதை, வைத்தியநாதன், நாகராஜன், பாலகிருஷ்ணன்,சௌதாமினி சுப்ரமண்யம், மீனாக்ஷி சுப்ரமணியன்   

அனைவரும் சரியான விடைகள் அனுப்பீருந்தனர்.  அனவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்.         

பின்னூட்டங்கள்:
Parthasarathy Srinivasan     May 10
HelloInteresting clues and a nice puzzle again. But was relatively easyby your past standard. There were errors in the numbering in (குறுக்காக: 10 (should be 2,4), 13 (should be 5)

யோசிப்பவர்:  May 10
சுழன்றாடும் - சூப்பர் சொல்லாடல்!! :)

பூங்கோதை:   May 10
நாடும், சிரஞ்சீவி - அருமை!
அனத்துக் குறிப்புகளே மிகவும் ரசிக்கும் படி இருந்தன. 


நாகராஜன்:  May 13
 
நெடுக்கு 1-க்கான பதில் "விண்" - அருமையான குறிப்புங்க சார். (விண்ணப்பம் - அப்பம் = விண்)  

சசி பாலு:  மே 13

தாங்கள் குறிப்பிட்டிருந்த படி அதிக மாக அறிவை பயன்படுத்தவில்லை.  எந்த சுவடியையும் புரட்டவில்லை.   ஆனால் அதிகம் ரசித்தது கழுத்தின் பின் பிசாசு தலை.  ஏனெனில் நிறைய  வீரர்களுக்கு நீள் முடி உள்ளது. 

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2