வியாழன், 14 ஜூன், 2012

"யோசித்து” குறுக்கெழுத்துப் புதிர் - 1இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தைப் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும்.

(இது என் “கன்னி”முயற்சி.  யோசிப்பவர் இந்தியாவிலிருந்து, யூ.எஸ்.ஏ இல் இருக்கும் என்னை “வலை” மூலமாகக் கையைப் பிடித்து வழிகாட்டி, ஊக்குவித்தார்.  இதில் சிறப்பாக ஏதேனும் கண்டால், பூக்கொத்துக்கள் யோசிப்பவருக்கு; பிழைகள் இருந்தால் கற்கள் என் பக்கம்.)
”யோசித்து” குறுக்கழுத்து - 1குறுக்காக:
1.நண்பா இடையில் பற்களில் கொஞ்சம் திருப்பி சிறந்தகுணமா? (5)
5.பரணி பாடக் காரணம் பார்க்காமல் காண்போர் (3)
6.வசம்பை தேட சில்லறை செலவழித்து உத்தர நாடு செல் (5)
8.உயிர் பிழைக்க தலை அறுத்த முதலை பதப்படுத்தி படுத்தி எடு (5)
10.பெரும்பாலும்  மகுடம் தண்ணீர் எடுக்கும் (3)
11.குழந்தை புத்தி; வளர்நிலா (5)

நெடுக்காக:
1.வரகு கொடுக்கவா? வாங்க, வாங்க!!(7)
2.தருமியின் கவியில் நக்கீரன் கண்டது தவறே! (3)
3.அரிசி கலைந்தால் அன்பு (3)
4.சாப்பாட்டுக் கடை மூடும் நேரம் வந்தார் அங்காடி ஊழியர் (7)
7.படிச்ச கலைஞருள் ஒருவர் மாமனாரின் மற்றொரு மாப்பிள்ளை (3)
8.இலக்குவன் பரதனுக்கு இளைத்தவனா? இல்லை இளையவன்! (3)
9.அந்த வளையில் குடியிருப்பது ”மழைக்கால பாகவதர்” (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

நகல் அனுப்புக

10 கருத்துகள் :

 1. பார்த்தசாரதி,
  விடைகள் வந்து சேர்ந்தன. மீதமுள்ள ஒன்றும் இதற்குள் விளங்கி இருக்கும்!

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. பூங்கோதை,

  விடைகள் முற்றிலும் சரி! வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. மனு,

  விடைகள் எல்லாம் சரி! வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. பூங்கோதை: good one! liked 4D down very much :-)

  முத்து: மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 6. ராமையா,

  விடைகள் எல்லாம் சரியே. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. மும்பை ஹரிஹரன்,

  விடைகள் எல்லாம்சரியே. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. பார்த்தசாரதி சொன்னது:
  தங்கள் முதல் குறுக்கெழுத்து நன்றாக வந்துள்ளது. குறிப்பின் முடிவில் எழுத்துக்களின் எண்ணிக்கை விட்டுப் போனது சிறிய குறை. ******* (4. நெடுக்காக) ஒரு masterpiece. வாழ்த்துக்கள்

  முத்து:

  பாராட்டுக்கு நன்றி. எழுத்துக்களின் முடிவில் எண்ணிக்கை சேர்த்துவிட்டேன்.

  பதிலளிநீக்கு
 9. இது வரை 14 பேர் விடை அனுப்பி இருக்கிறார்கள். விவரங்களை இங்கே பார்க்கலாம்:
  http://tinyurl.com/yOciththu

  பதிலளிநீக்கு
 10. என் தங்கை சொல்வது:
  your first try is good and easy I could not find the answer for 2

  பதிலளிநீக்கு

பின்பற்றுபவர்கள்