மகேசன் குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_8

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால்  இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பபார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும்  படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.
வார்த்தைகளைத் தேட இவை உதவலாம் :
http://www.tamilvu.org/library/dicIndex.htm
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/ குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_8 <!--Generated by PuthirMayam Crossword Builder Wed Jul 10 2013 22:36:53 GMT-0400 (Eastern Standard Time)

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.சுல்தானை விலக்கிய மைசூர் மன்னர் பாதி சந்தடியுடன் கூடுமிடம். (5)
4.இடை சென்ற மககேசன் வாகனம் ஆறு. (2)
6.குப்பு இரண்டாம் இடத்தில் கதறி முடிவு சேர்க்கும் சைகை (4)
7.பேச்சடங்குவதில் அடங்கிய காரியம் (4)
9.கனி உண்ட ருசி துதித்தது துதி மாறியது (5)
12.நீண்ட ஊதுகுழலின் (இசைக்கருவியின்) அடிப் பாகமா? இல்லை பெண்ணே! இது கவிஞர் பார்வையில் தண்மதியின் காதலியடி! (4)
14.அதிசயிக்க தக்க காவியக்கலை காலை மறைந்தது. (4)
17.மாதா திரும்பினாள் தானாக! (2)
18.தலைவன்  பின்னே வந்த மலை வள்ளல் பாரி ஆண்ட பகுதி. (3,2)

நெடுக்காக:
1.மெய் போக சருக்கும் காய்ந்த இலை. (3)
2.தாயார் குடி கொண்ட தலம் ஏழில் ஒன்று சேர்ந்த திருப்தி . (5)
3.இடைஇழந்து புத்துரு கொண்டான்; தந்தைக்குத் தன் இளமை ஈன்றான். (2)
4.சிவவாக்கியர் வாக்கில் பேசாத கல் இறுதி இழந்த இழப்பு. (3)
5.  அதிக புத்தி பரிசு. (4)
7.மூன்று ஸ்வரம் தரும் முடியாத சரித்திரம். (3)
8.மலருந்தாமரை மலருடன் மறைந்தால் மலரும் மலர். (4)
10.தினம் வண்டி மாறி வரும் ஊரில் காடு நீக்கினால் கிடைப்பது உணவு! (3)
11.  வயதாய் துன்பம் சேர்த்து தாபம் நீக்க வெளிவருவான் புனிதன். (5)
13.வியப்பு சுழன்ற மாயம். (3)
15.வருத்தம் கலை நடுவே தலையிடும். (3)
16.பசு பைத்தியம் ஆரம்பம் சினம் கொண்டவன். (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

நகல் அனுப்புக
-->

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2