வெள்ளி, 9 ஜனவரி, 2015

முத்துவின் ஜனவரி 2015 குறுக்கெழுத்துப் புதிர்


முதல் வருகையா?

இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்:
http://muthuputhir.blogspot.com/2014/11/blog-post_9.html

கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(.)mayam(@)gmail(.)com. என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

இதுவரை விடைகள் அனுப்பியவர் பெயர் விவரம் பார்க்க:
http://tinyurl.com/xwordstatus


Comments:

தமிழ்  கூறியது:  எளிமை அருமை புதுமை!
ரா. வைத்தியநாதன்: romba kashtam saar
பார்த்தசாரதி: 
Challenging and interesting as always. Keep it up. But 3dn is not clear to me and I think 6dn lacks definition.
கோவிந்த்: 
குறுக்கெழுத்து மிக அருமையாக இருந்தது. வாழ்த்துக்களும் நன்றிகளும்.  விடைகளுக்கான விளக்கத்திற்கு கூடுதல் நன்றி. --கோவிந்த்

 

 

ஜனவரி 2015 குறுக்கெழுத்துப் புதிர்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


இந்தப் புதிர் பற்றி தங்கள் மதிப்பீடு என்ன?:

குறுக்காக:
4.கம்பளிப் பை மறுபடி எல்லைகள் தாண்டி கைவிட்ட புத்தகப் பகுதி. (5)
5.மானிடை துஞ்சிய முதல்வன் வாழும் ஊர். (3)
7.வந்த வழி திரும்ப முடியா இன்பம். (2)
9.வித்தை சாத்திரங்கள் தரும் கவலைகள். (6)
10.பஞ்சம் தீர் - பட்டினி முடிவெடுத்து, தலை சிறக்க விரை (2,4)
11.புயல் மறைத்த புதையலில் பணப் பை. (2)
12.காராம்பசு திரும்பி வரும் வழியில் நன்மை காட்டும். (3)
13.சுதா (செய்) காரம் உடல் நலத்திற்கு வழி. (5)

நெடுக்காக:
1.பாதி கொண்டாடி வெற்றிக்கு நாட்டு. (2)
2.அனேகமாக சிரஞ்சீவி மட்டும் வெற்றி அடையும் விளையாட்டு. (7)
3. புத்தகத்தை அட்டைகளோடு பாதி வித்துக் கவி. (6)
6.முட்டுக்கான திரளை ஜெயிக்க தினவில்லை. (7)
8.பட்சி கணிப்பதில் பதில் இல்லை; தொண்டு உண்டு! (6)
14.சுந்தர வினாயகருக்குள் சூரியன் அடக்கம். (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்