பாரதிகலை - 4

வழிமுறை


கீழே உள்ள கட்டங்களில் மகாகவி பாரதியாரின் பாடல் ஒன்றின் சில வரிகள் நெடுக்காக மட்டும் கலைந்துள்ளன. கறுப்புக் கட்டங்கள் வார்த்தை அல்லது  வாக்கிய முடிவுகளைக் குறிக்கின்றன. அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்ற முடியும்.எழுத்துக்களை மெல்ல தட்டித் (click) தட்டி இப்பக்கத்திலேயே புதிரை அவிழ்க்கலாம்.

இம்முறை, அனேகர் கேள்விப்பட்டே இருக்காத பாடல் ஒன்றிலிருந்து எடுத்திருக்கிறேன்.   சூரியன் உதிப்பதும் பூமியில் உயிரினங்களெல்லாம் உற்சாகமடைவதும், நாம் எல்லோரும் ஒவ்வொரு நாளும் காணும் நிகழ்ச்சி.
அதுவே பாரதியார் கண்களுக்குத் தாயாம் பூமியும், தந்தையாம் உதய ஞாயிறும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதலை வெளிப்படுத்துவதாகத் தெரிகிறது! 

விடை கண்டுபிடிக்க இரண்டு வார இறுதிகள் இருக்கின்றன.  


புதிரை முழுதும் கண்டுபிடித்து விட்ட பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்” என்னும் பொத்தானை அழுத்தினால், நீங்கள் சரி செய்த வரிகள் கிடைக்கும். அதை பின்னூட்டத்தில் இடவும். 
 
மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமாகவும் அனுப்பலாம்.





    

முக்கியக் குறிப்புகள்:
(முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு)

இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/02/3.html

Comments

  1. பூங்கோதை அவர்களுக்கு,

    பாரதிகலை-4 க்கு சரியான விடை அனுப்பியதற்கு வாழ்த்துக்கள். பங்கு கொண்டு ஆதரித்ததற்கு நன்றி!

    முத்து

    ReplyDelete
  2. யோசிப்பவர்,

    சரியான விடையை, துரிதமாக அனுப்பியதற்கு நன்றி. இதுவரை உங்களையும் சேர்த்து மூன்று பேர்கள் விடை அனுப்பி இருக்கிறீர்கள்!

    முத்து

    ReplyDelete
  3. மனு,

    நன்றி கலந்த வாழ்த்துக்கள்!

    >>கூகுள் உதவி வேண்டியிருக்கிறது. ஒரு சில வார்த்தைகள் கண்டுபிடித்துவிட்டு
    அதை கூகுளில் இட்டால் வந்துவிடுகிறது.
    இது ஒரு புதிய, நான் எண்ணிப்பார்க்காத அணுகு முறை! இம்மாதிரி புதிர்களை,
    தமிழ் மொழி இலக்கண அறிவைக் கொண்டே - சொல்லில் எந்த எழுத்து எங்கு வரலாம் என்ற அறிவைக் கொண்டே - நான் விடை கண்டு பிடிக்க முயல்கிறேன்.

    >>இருப்பினும் பாரதியை படிக்க வைப்பது இதன் சிறப்பு.
    அதுதான்- பாரதியைப் படிக்கத் தூண்டுவதுதான் - என் குறிக்கோள்; நானும் புதுப் பாடல்களைத்
    தெரிந்து கொள்கிறேன்.

    முத்து

    ReplyDelete
  4. shanthi narayanan,

    விடை கிடைத்தது. சரியாக இருக்கிறது. வாழ்த்துக்களுடன் நன்றி!
    முத்து

    ReplyDelete
  5. Hari,

    உங்கள் விடை கிடைக்கப்பெற்றேன். வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  6. 10அம்மா,

    சரியான விடை. நன்றி. வாழ்த்துக்கள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

எழுத்து சுடோகு - திரைப்படம் கேஎஸ்ஜி-முத்துராமன்