வியாழன், 3 மே, 2012

கலைமொழி - முத்து 2

கட்டங்களில் ஒரு செய்தி (அ) கவி வரிகள் கலைத்துக் கொடுக்கப்படும்.   ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் இருக்கலாம்.  நெடுக்காக மட்டும் கலைத்துக் கொடுக்கப்படும். கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளை குறிக்கும்.   அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும்,   அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

எழுத்துக்களை மெல்ல தட்டித் (click) தட்டி இடம் மாற்றி, இப்பக்கத்திலேயே புதிரை அவிழ்க்கலாம்.

புதிரை முழுதும் விடுவித்த பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்” என்னும் பொத்தானை அழுத்தினால், நீங்கள் சரி செய்த வரிகள் வலப்புறமுள்ள பெட்டியில் காணக் கிடைக்கும். அதைப் படிவமெடுத்துப் பின்னூட்டத்தில் (post comments) இடவும் அல்லது  மின் அஞ்சல் (inamutham@gmail) மூலம் அனுப்பவும்.

முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)

(கலைக்கப்பட்டிருப்பது: திருக்குறளிலிருந்து  - ஓர் அதிகாரத்திலிருந்து இரண்டு குறள்கள்)


Puzzle Creator Link: http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

”கொசுறு”: எந்த அதிகாரம்? தலைப்பு என்னவென்று கூறவும். 

5 கருத்துகள் :

 1. 10அம்மா சொல்வது: “ஒரு சந்தேகம்: ”நீர் இன்றி” ”வான் இன்றி” என்று தானே வரும்”

  ஆமாம். படியெடுத்த மூலத்தில் (http://www.tamilcube.com/thirukkural/Thirukkural-in-tamil.html) இருந்ததை சரி பார்க்கத் தவறிவிட்டேன்!

  பதிலளிநீக்கு
 2. பூங்கோதை, ராமையா, ஷாந்தி, மாதவ், 10அம்மா:

  அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள். பாடப் பிழையைச் சரி செய்து விட்டேன்.

  உங்களுக்குத் தெரிந்த தமிழார்வமும், தமிழறிவுமுள்ள பள்ளி மாணவர்களுக்கு இந்த வார்த்தை விளையாட்டுக்களை அறிமுகப்படுதவும். விளயாட்டாகவே தமிழ் இலக்கிய அறிவை வளர்க்க
  இது ஒரு சிறு முயற்சியாகலாம்!

  பதிலளிநீக்கு
 3. தமிழ் பிரியன்,

  நன்றி கலந்த வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. நாகராஜன், வாழ்த்துக்கள்.

  >> மழை enbathai ezhithaaga kandu pidikka mudivathaal rombavumae easy-a irunthuthunga.
  திருக்குறளிலிருந்து என்று சொல்லாமல் போட இருந்தேன்; பிறகு பதிலே வராமல் போய்விடுமோ என்று பயந்து, அதைச் சேர்த்தேன்!

  பதிலளிநீக்கு

பின்பற்றுபவர்கள்