வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

கலைமொழி -முத்து 11

இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.

முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)

இம்முறை, திருக்குறளின் ஒரு அதிகாரத்திலிருந்து** இரண்டு குறள்கள் கலைத்துக் கொடுக்கப்
பட்டிருக்கின்றன. செய்யுள் வடிவத்திலிருந்து மாற்றப்பட்ட வடிவம் கொடுக்கப் பட்டிருக்கிறது.

உ -ம்:

செய்யுள் வடிவம்:

பல்லார் முனியப் பயனில சொல்லுவா
னெல்லாரு மெள்ளப் படும்

மாற்றப்பட்ட வடிவம்:

பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்
அதிகாரம் தெரிந்தால் எளிதாக இருக்குமோ?  இங்கு  (http://muthuputhir.blogspot.com/2012/08/23.html) போய் முயன்றால் அதிகாரத்தின் முதல் குறள் தொடக்கம் தெரியும்:நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html


இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.


வேடிக்கைக் கணக்கு/புதிர்கள் பார்க்க:
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/blog-post_24.html  (தமிழ்)
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/problemsjust4fun-1.html (English) 

கலைமொழி -முத்து 10   விடை:

வெள்ளத்து அனைய, மலர் நீட்டம்; மாந்தர் தம்
உள்ளத்து அனையது உயர்வு 

உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்; மற்று அது
தள்ளினும், தள்ளாமை நீர்த்து.

சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம் 6  பேர்)
ஹுஸைனம்மா, வேதா, சாந்தி,
இளங்கோவன், ஆனந்தி செல்வா, கிரிஜா ரமேஷ்

அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

2 கருத்துகள் :

 1. திண்டுக்கல் தனபாலன்>பயனில சொல்லாமை on கலைமொழி -முத்து 11

  நண்பரே,

  இந்தப் புதிர் விளையாட்டில் பங்கு கொண்டதற்கு நன்றி.

  நீங்கள் புதிரின் குறிக்கோளைக் கவனிக்கவில்லை யென்று தெரிகிறது. அளித்த விடை தவறகவும், முற்றுப் பெறாததாகவும் இருக்கிறது.

  முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)

  நன்றி.

  முத்துசுப்ரமண்யம்

  பதிலளிநீக்கு
 2. இளங்கோ,

  நீங்கள் சொல்வது சரி. பிழையைத் திருத்திவிட்டேன்.

  உங்கள் விடை சரியே.
  நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

பின்பற்றுபவர்கள்