கலப்புக் குறுக்கெழுத்து - 1 விடைகள்

குறுக்காக:

1.கீழே பால் குடிக்கக் கூடாத ஒன்று இதுவே (5)    பனைமரமே
4.பாதி முனைதல் (சங்) (2)  நுனி  (முனை = நுனி)
6.ஊன்றுகோல் (4) கைத்தடி
7.பேச்சு வழக்கு போகவில்லை மறை உண்டு (சங்) (4) இருக்கு  (இருக்கிறது = இருக்கு = ரிக் வேதம் = மறை)
9.கோபத்தில் முகம் -----? (5) சிவந்ததா  (சிவக்குதா  என்ற பதிலும் ஏற்கப்பட்டது)
12.போட்டியிட்ட இரு பிராணிகள் ஒன்று தோற்றதற்குக் காரணம் (சங்) (4) (முயல் + ஆமை) =முயலாமை
14.குற்றம் புரிந்தவன் குழம்பிய அதிபரா? (சங்) (4)  அபராதி
17.உடன் படுவதைத் தெரிவிக்க அல்லியின் பல் நீக்கு (சங்) (2) (அல்லி = ஆம்பல்; ஆம்பல் - பல் =) ஆம்
18.ஆதித்த கரிகாலன் அகால மரணமெய்திய ஊர் (5)  கடம்பூர் (கல்கியின் பொ. செ)

நெடுக்காக:
1.கைகள் ஆசனம் (சங்) (2) (பல + கை=) பலகை (ஆசனம்)
2.முடிவற்ற மருதம் பின் வந்த காசியில் பிறந்த கவிஞர் (சங்) (5) (மருதம்- ம் =மருத) மருதகாசி
3.கோழை படாத செல்வம் (2) (மேழிச் செல்வம் கோழை படாது: கொன்றை வேந்தன்) மேழி
4.நுனி முதல் தொடர்ந்த உட்பொருள் அனுபவி (சங்)  (நுனி முதல் = நு; உட்பொருள் = கரு) நுகரு
5.மன்னன் தலை கீழிருக்கும் தண்ணீர்ப் பானை மன்னன் தலைமேலிருக்கும் (சங்) (4) (மன்னன் தலை = ம; தண்ணீர்ப் பானை = குடம்) மகுடம் (மன்னன் தலைமேலிருக்கும்)
7.அண்மைப் பொருளைச் சுட்டும் சொல் (3)  இந்த (”இங்கு” என்ற பதிலும் ஏற்கப்பட்டது; அகராதிப் படி, ”இந்த” என்ற சொல்லே பொருந்தும்)
8.தங்கத் தலையணி (4) பொன்முடி
10.செழிப்பு (3) வளமை
11.முதலற்ற பொன்னாடை சென்னைக்கருகில் இருக்கும் (சங்) (5) (பொன்னாடை = பீதாம்பரம்)  தாம்பரம்
13.குதிரை கால் காக்கும் (3) லாடம்
15.மேட்டு நிலம் (3)  திடர்  (கடைசி எழுத்து 18 குறுக்கு  பதிலிலிருந்து வரும்)
16.முடிவற்ற இன்பம் தவிர (சங்) (2) (இன்பம் = போகம்; போகம் - ம் = போக = தவிர) போக

குறிப்புகள்:

பங்கு கொண்டவர்கள் எண்ணிக்கை: 8
(வீ. ஆர். பாலகிருஷ்ணன், நாகராஜன், சாந்தி, ராமச்சந்திரன், ராமையா, யோசிப்பவர், ராமராவ், மீனாக்ஷி சுப்ரமணியன் )
அனைவருக்கும் நன்றி.

அதிகம் தவறவிடப்பட்டவை:  குறுக்காக 4, 7; நெடுக்காக 3, 15, 16

கருத்துரைகள்:

Sasi Baloo
Nov 26 (5 days ago)

to kurukkumnedukk.
அனைவருக்கும் வணக்கம் பல
முனைவர் முத்து அவர்களின் கலப்பு புதிர் விடுவிக்க நிறைய சரித்திர நவீனங்கள் ஓலை சுவடிகள் புராணங்கள் இதிகாசங்கள்  மற்றும் நிகண்டுவையும் புரட்ட வேண்டி உளது.  எ. கா
முதல் நீக்கிய பொன்னாடை,, தங்கத் தலையணி, மேட்டு  நிலம், கோழை படாத செல்வம்  மற்றும் பல   .  புது அனுபவம்.   கடும் புதிர் அரசி பூங்கோதை அவர்களின் படைப்புக்கு பிறகு விடுவிக்க கடும் முயற்சி எடுக்க வேண்டி உள்ளது. 
ஆர்வலர்களின் கருத்தினை அறிய ஆவல்
வீ.ஆர்.  பாலகிருஷ்ணன்  
Nagarajan Appichigounder
Nov 26 (5 days ago)

to sasi.baloo, me
Exactly-nga Balakrishnan sir. Most of the clues are really hard to crack and like you said we have to look into lot of different sites to get the answers for them. Haven't finished them completely yet and trying hard to find answers for the top right corner ones :)... Will try to send my answers today and see how many of them I got right. Kudos to Muthu sir for coming up with this hard one which gives me more pleasure and enjoyment to work on as it is little challenging... :)

Anbudan,
Nagarajan Appichigounder.


R.Vaidyanathan mailadmin@puthirmayam.com
Nov 26 (5 days ago)

to me, ramachandran.v.
kurippukku EtRRa sol kidaiththadhum,adhanai oorjitham seyyum vagaiyil kurippin oru pagudhi amindhirundhaal nalamaai irukkum

                 (குறிப்புக்கு ஏற்ற ...)  சங்கேதக் குறிப்புகளுக்கு அவ்வாறு செய்திருப்பதாகத்தான்    நினைத்தேன்; மற்றக் குறிப்புகளுக்கு அவசியம் என்று தோன்றவில்லை.  கருத்துக்கு நன்றி.  அவசியம் சீர்திருத்திக் கோள்ள முயல்வேன். --   முத்து

Sir,
 I think this puzzle as one of the best that have comeout . Since some of the clues had more than  one meaning, i got struck in one and didn"t think of the other one. the mistake is mine . I enjoyed this very much. Thankyou for that and expect many more from you.
shanthi.
நான் ரசித்த குறிப்புகள் : முயலாமை, நுனி, மகுடம்

- யோ

பாதி முனைதல் என்பதில் சங்கேத குறுக்கெழுத்துகளுக்கான "Two parts of clue
both pointing to single answer" விடுபடுகிறது. ஒரம் பாதி முனைதல் எனில்
அந்த இரட்டைப் பூட்டு வரும். குறுக்கெழுத்துக்கென சட்டதிட்டம் எதுவும்
இல்லையெனினும் இப்படி அமைந்தால் எளிதாகவும் எல்லா நேரத்திலும்
குழப்பமின்றி சரியாகவும் அமையும் என்பது எ.தா.எ. (IMHO).

 12. மிக மிக அருமை.
 --  மனு

மனு,
பாதி முனைதல் குறிப்புக்கு இரட்டைப் பூட்டு யோசித்துப் பார்த்து முடியாமல்
விட்டு விட்டேன்.  உங்கள் வழி தோன்றியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மற்றபடி, பாராட்டுக்கும், ஊக்கமளித்ததற்கும் நன்றி.
  -- முத்து

விளக்கங்களைப் பார்த்தபின்தான் புதிர்கள் கடினமானவையில்லை என்று தெரிகிறது.மேழி என்பது மட்டுமே புதிய வார்த்தை.
மீண்டும், மீண்டும் இதுபோல் புதிர்களை வேண்டுகிறோராமையா நாராயணன்

கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.  பாராட்டுக்களுக்கும் ரசனைகளுக்கும் மனமார்ந்த நன்றி. இனி தயாரிக்கும் குறுக்கெழுத்துப் புதிர்களில் குறைகளைச் சரிப்படுத்த முயல்வேன்.

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2