புதன், 16 ஜனவரி, 2013

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_1 விடைகள்

குறுக்காக:
3.செய்யுள் இறுதியில் சீர் குலைந்த சீரகம் சேர்ந்த 
     பழங்காலத்தில் மத்தியகிழக்கு நாடு (5)     பாரசீகம்    (செய்யுள் = பா; சீர் குலைந்த சீரகம் =ரசீகம்)
6.சுவைத்த அனுபவம் ஒரு சித்தத்தில் தெரியும் (4)  ருசித்த
7.எண்ணெயில் சர்க்கரை - முடிவு என்ன (4)    கரையாது  (முடிவு = கரை; என்ன = யாது)
8.பாதி மர்மம் புசித்தவர் பயந்தவர் (6) மருண்டவர் (மர்+உண்டவர்)
13.எருதின் முதுகில் இருப்பது சிறு சட்டி விளக்கு - 
            குழம்பினால் மிகையில்லை (6)  அதிகமில்லை  (திமிலை+அகல்)
14.மணி உள்ளே திரும்பிய மரம் கைக்கு அலங்காரம் (4)  மருதாணி (தாரு = மரம்)
15.முன்பு கேட்டிராத மார் தட்டிய புதிர் தானமா? (4)  புதிதான  ( புதிர் தானமா (minus)  மார்)
16.சபை ஆடும் கெஞ்சும் (5) மன்றாடும்  (மன்று = சபை)
நெடுக்காக:
1. முதல் பலத்து திரும்பி வரு மழை ஐப்பசி-கார்த்திகையில் வரும் (5)  பருவமழை
2.புத்தா ஈண்டு ஈ இல்லை புது வருடம் (5)   த்ாண்டு
4.அரசி கர்மத்தில் அபிமானி (4) ரசிகர் (= அபிமானி)
5.அங்காடி பின்னே அறையப்படுவது வண்டி உருண்டோடத் தேவை (4)  ையாணி (=அச்சாணி)
9.வருந்தி மெய்யிழந்து வா (3) வருதி (வருந்தி -ந்)
10.அயோத்தி அரசி நல்ல தோழி (5)ுமித்ிரை (சு+மித்திரை)
11.பசு கொடுப்பதைக் காடு தொடரும் வறண்ட பிரதேசம் (5) பாலைவனம் (பாலை+ வனம்)
12.உறுதியில் நுழைந்த கடைசி குரு கள்வன் (4)  ிருடன் ( திடன் +ரு)
13.பாதி அணிந்த பாதி உடையோடு குழுத்தலைவர் வந்தார் குழுவோடு (4) அணியோட  (அணிந்த + உட ோடு )

பங்கு கொண்டவர்கள்:  (10 பேர்)


மாதவ், சாந்தி, நாகராஜன், ராமராவ், ராமையா, ஹரி பாலகிருஷ்ணன்,  மனு, ராஜேஷ், மீனாக்ஷி சுப்ரமணியன், வீ. ஆர். பாலகிருஷ்ணன் 

அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்.             

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்