ஞாயிறு, 10 மார்ச், 2013

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_3 விடைகள்

குறுக்காக:

1. நல்லபாம்பா? முட்டை பின் நான்முகனிடம் முன்னிடம் இன்றி கடைசியில் வருமா (5)   கருநாகம்
4.ரிஷி தலை சுற்றிய வாள் பொங்கி உண்ணலாம் (3)  அரிசி
6.பாகர்குப் புறம்பான திக்குப்பாலகர் “சுதந்திரம் நமது பிறப்புரிமை” என்று முழங்கினார் (3)  திலக்
7.படிமம் கண்டவாறு கண்டம் நீக்கித் திரும்பிவா (5)  மறுபடிவா
8.கர்நாடக இசைப்பாடகி பட்டம்மாளின் ஊர் மைய இடம் சேர்த்து கடிதம் கொடு (4)  மடல்தா
9.சந்தோஷத் தொடக்கம் பின்னே வலிமையா? ஆசையா? (4)  சபலமா
12.முடிவின் முதல் கொண்டு மறைதல் கடவுள் (5)  மறைமுதல்
14.குறைதலைக் கொண்ட தீர்ப்பு சொல்லில் பகுதி போனது (3) விகுதி
16.கங்கைப் புனலில் கசப்பு (3) கைப்பு
17.ஆகாயத்தேர் பறந்த வால் கொண்ட குரங்கு (5)  வானரதம்

நெடுக்காக:
1. எண்ணி ஐந்தைச் சுற்றும் நடை (3)  கருதி
2.கமல் நாக்கு குறைத்தால் கிடைக்கும் ஆஸ்தான கவிஞர் ஊர் (5)  நாமக்கல்
3.பேரின்பம் பாதி மறுப்பு பாதி சேர்ந்த குற்றம் (4)  மாசுமறு
4.இனிப்புப் பண்டம் முடிக்காமல் சொன்னது அக்காலத்தில் (3)  அப்ப
5.ஓசி மறைவா ஒசமா? தலைகள் போகும் தண்டனையா? (5) சிறைவாசமா
8.குன்றுச் சிறுமி சிவகாமி (5)  மலைமங்கை
10. நிலை அளிக்க பரதவித்த மெய் தேய்த்து சுழற்றி விடு (5)  பதவிதர
11.அல்வாவுடன் லகரம் சேர்த்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும். இல்லையா? (4) அல்லவா
13.பழங்காலத்தில் புன்முறுவல் பாதி திரும்பும் (3)  முன்பு
15. பலத்த அடிவாரத்திடம் உள்ளது மன உறுதி (3) திடம்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்