செவ்வாய், 1 ஜூலை, 2014

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014 - ஜூன் : விடைகள்

குறுக்காக:
5.குளத்தடி கரைகளிலே அருந்து. (2) குடி
6.ட்டம் குறைந்தால் குறைதல் குறைந்தால் விளையாட்டு. (6) பந்தாட்டம்
7.நித்தம் வரும் நிலவு வருத்தம் போக்கித் தரும் மன அமைதி. (4) நிம்மதி
8.முதல் முதல் தொடர்ந்த தலை தண்ணீரில் பேராபத்து. (3) முதலை
9.முக்கனியில் (வாழை,ா, பலா) ஒன்று குறைவது ஆதாயமா? (3) லாபமா
11.ந்த தலைவர் நுழைந்த போது செல்வது. (3)  போவது
13.சாதாக்கம்மல் சாமம் கழிந்தால் செய்தி. (4) தாக்கல்
16.பொருள் ஈட்டிய நெல் (=சம்பா) தகரங்கள் (தித்த). (6) சம்பாதித்த
17.சற்றே பொறு, தோழி! (2)  சகி

நெடுக்காக:
1.சிகையும் தீரும். (4)  முடியும்
2.பயங்கர சூழலிலா ஸ்வரம் கூடிய (ப) தீபாராதனை  (ஆலாத்தி)? (5) ஆபத்திலா
3.கை இழந்த தாமரைக் கால்  (பாதாம்புயம்) பால் தரும் பருப்பு. (3)  பாதாம்
4.பின்னால் வராத தொண்ரை கவராத கண்வரை மறை. (4) தொடராத
10.திங்கள் தோறும் நான்கு வாரத்தில் (=மாதம்) திரும்பிய தாய்  (மாதா). (5) மாதாமாதம்
12.சிவபுரம் நுழைவாயில் தெரியாமல் குழம்பும் எல்லை. (4) வரம்பு
14.ண்ணன் உடல் நீக்கி ம்சம் உடல் சேர்த்த மாமன். (4) கம்சன்
15.ஊர் விட்டு வந்த நீதிபதியா? இது நியாயமா? (3)
விடைகள் அனுப்பி ஊக்குவித்த 17 புதிர் ஆர்வலர்கள்:
பவளமணி பிரகாசம், பார்த்தசாரதி, ரமராவ், ஹரிஹரன், எஸ்., ராமையா, பாலாஜி, கே., மாதவ், சசி பாலு, நாகராஜன், வைத்தியநாதன், கு. ரா. சந்தானம், வடகரை வேலன், தமிழ், சௌதாமினி சுப்ரமண்யம், கீதா சிவகுமார், நாகமணி, சாந்தி 
இவர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த பாராட்டுகள்.
தங்கள் பெயர் விடுபட்டிருந்தால் தெரிவிக்கவும்.  தவறுக்கு மன்னிக்கவும்.  
அதிகம் தவறப்பட்ட குறிப்புகள்:  11.குறுக்கு (4 பேர்); 2. நெடுக்கு (5 பேர்)

பின்னூட்டக் கருத்துகள் : 

திரு. பார்த்தசாரதி:

As usual, a nice crossword but quite easy. Learnt a new word ஆலாத்தி. Also learnt that தாக்கல் will also mean செய்தி (later it struck me that we use தாக்குத்தகவல் commonly)

8.முதல் முதல் தொடர்ந்த தலை தண்ணீரில் பேராபத்து. (3) முதலை (synonym for தலை would have made it slightly difficult)
9.முக்கனியில் ஒன்று குறைவது ஆதாயமா? (3) லாபமா (Nice clue, but could have given a twist)

11.வந்த தலைவர் நுழைந்த போது செல்வது. (3) போவது (synonym for போது would have made it slightly difficult)
--
Even as such, this is the second most missed item:  4 out of 17 missed it!:  முத்து --

திரு. வீ. ஆர்.  பாலகிருஷ்ணன்:

முனைவர் முத்து அவர்களின் ஜூன் மாத புதிரில் எல்லா குறிப்புகளுமே  நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.  சரியான மூளைக்கு வேலையாக அமைந்துள்ளது மிகவும் பாராட்டுக்கு உரியது.    என்னை கவர்ந்த, சிந்திக்க வைத்த குழப்பிய சில குறிப்புகள் பின் வருமாறு.

கவர்ந்தது

நிலவை பற்றியது
முக்கனி
பொருள் ஈட்டும் திறன்

சிந்திக்க வைத்தது
நீரினில் ஆபத்து
நான்கு வாரம்
சிவபுரம் எல்லை

குழப்பியது
தலைவரின் வருகை
தீப ஆரத்தி  இந்த இரண்டு குறிப்புகளும்  அவ்வளவு தெளிவாக இல்லையோ என படுகின்றது.    முனைவர் எந்த விடையை எதிர்பார்க்கிறார் என விளங்க வில்லை.

கோபமா தாபமா விபத்தினால் ஏற்படும் ஆபத்தா? 
நேரம் இருப்பின் தங்களின் கருத்துகளை பகிர்ந்து   கொள்ளலாமே
புதிராக்கம் புனைவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்
--11. கு.  (தலைவர் வருகை) , மற்றும் 2. நெ. (தீப ஆராதனை):  இருவர் தவிர மற்ற யாவரும் சரியாகச் சொல்லிவிட்டனர்.
10. நெ. (நான்கு வாரம்) ஒருவர் தவிர மற்ற 12 பேர்களும் சரியான விடை சொல்லிவிட்டனர்.

குறிப்புக்கள் எல்லாமே சங்கேதக் குறிப்புக்களே.  இதை மனத்தில் வைத்தால், வந்த ”தலைவர் நுழைந்த போது”ம், ”ஸ்வரம் கூடிய தீபாராதனை” யும் காட்டும் மறை பொருள் தோன்றும்.  தீபாராதனைக்கு வேறு சொற்கள் இருப்பதும், அவற்றில் ஒன்றை நினைக்க வேண்டியிருப்பதும் சற்று சிக்கல்/சுவாரஸ்யம் கூட்டுவதற்காகவே தீபாராதனை என்று சொன்னேன். -- முத்து
திரு. ரமராவ்:
6 குறு: அருமை
பாராட்டுக்கு நன்றி - முத்து

திரு. ரமராவ்: ஆனால் இந்த விடை (ஆபத்திலா) எப்படி வருகிறது என்றே இப்போதும் புரியவில்லை. விளக்கம் சொன்னால் நல்லது.
முத்து:
தீபாராதனை = ஆலாத்தி

University of Madras Lexicon

ஆலாத்தி

* n. ā-rati. Light, etc.,waved before an idol or any important personage. See ஆரத்தி. ஆலாத்தி சுழற்ற லென்கோ(சௌந்தரி. 103).
​ஆலாத்தி என்ற சொல் மிகவும் புதிது. 

University of Madras Lexicon

ஆரத்தி

* n. ā-rati. 1. One ofsixteen acts of worship, consisting in the wavingof a light or lighted camphor before an idol;தீபாராதனை. 2. The waving of light, or watermixed with saffron, or saffron-coloured food-balls, before important personages such as anewly wedded couple, a ruler, or a spiritualhead, in processions or on other auspiciousoccasions; ஆலத்தி.
Searched word ஆரத்தி

தமிழ் தமிழ் அகரமுதலி

ஆரத்தி

ஆலத்தி; தீபாராதனை.
Searched word ஆரத்தி

ஆலாத்தி+ப ==> ஆபத்திலா

திரு. ரமராவ்: தீபாராதனை என்ற சொல்லுக்கு ஆரத்தி என்று சொல் உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஆலாத்தி என்று இப்படி ஒரு சொல் இருப்பது நிச்சயமாக அநேக பேருக்கு தெரிய வாய்ப்பில்லை.
விளக்கத்திற்கு மிக்க நன்றி.
திரு. நாகராஜன்:
Vanakkam. Nice simple & well formed clues. I felt a lot easier this time and no need of referencing agarathis :). Liked many of the clues. Will send the details later on the ones I liked most.

திரு. தமிழ்: முந்தைய புதிர்களை விட சற்றே எளிமையா அல்லது தங்களுக்கு பழகிவிட்டோமா!! :-) Good Time pass 

முத்து: எளிதாக இருப்பதாக மற்றும் சிலரும் கூறியுள்ளனர்.  பொழுது இனிமையாய்ச் செல்வதே குறிக்கோள்.  சில சமயம் எளிதாக அமைந்து விடக் கூடும்!

திரு. ராமையா: எல்லாக் குறிப்புகளுமே மிக மிக எளிதாக இருந்தன.மிக விரைவில் முடித்துவிட்டேன். எப்பொழுதும் உங்கள் புதிரில் ஒன்று இரண்டு மிக சிந்திக்க வைக்கும் புதிர்கள் இருக்கும். இம்முறை எல்லாமே மிக எளிதாக இருந்தன.

முத்து: எளிதாக அமைந்தது அறிய மகிழ்ச்சி.  2. நெ., 11. கு சிலருக்குத் தொந்திரவு கொடுத்தன!

 

 

 

 
 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்