சுடுங்கருவி குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014 - ஜூலை : விடைகளும் பாராட்டுரைகளும்

புதிர் இருக்குமிடம்:   http://muthuputhir.blogspot.com/2014/07/2014_9.html

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால்  இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பபார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும்  படிக்கவும். 

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

குறுக்காக:

1. உணவாக்கி சுடுங்கருவி. (5)  துப்பாக்கி  (துப்பு = உணவு)
4.யானையில் மூன்றில் ஒன்று - இது யானைக்கும் சறுக்கும்! (2)  அடி  (கஜம் = யானை)
6.பாதி திருவடி தொடர்ந்த பாதியில் பாதி வெள்ளம் வடியும் வழி. (4)   வடிகால் (பாதி திருவடி = திருவடி  பாதியில் பாதி = கால்
7.நூற்றுவர் தலைவனுடன் சேர்ந்து வந்த பாதி குலதிலகம் புத்தகங்கள் நிறைந்தவன். (4)   நூலகம்;  நூற்றுவர் தலைவன் = நூ  பாதி குலதிலகம் = லகம்; 
9.புதின தாது பழசானதில்லை. (5)  புதிதானது  (anagram)
12.வருமானம் பெறுவார் பெறுமானம் குறைந்தால் போகார். (4)  வருமானம் பெறுவார்
14.கோணி தைக்க குத்தல் பாதி முழுவதும் தூசி. (4)  குத்தூசி
17. நரம்பு விரும்பி. (2)  நாடி (= நரம்பு; விரும்பி)
18.பிரண்ட வம்சத்து சாரம். (5)  சத்துவம்

நெடுக்காக:
1.தேங்காயைப் பொடியாக்க உத்தானபாதன் மகனால் முடியவில்லை! (3) துருவ
2.செல்லப் பெண் பெயர்  (= பாப்பு) செவி (காது) சாய்த்துக் கேட்டால் காப்பாற்றப் படுவாய். (5) பாதுகாப்பு
3.கிளியின் இடை மறைத்த உறவு. (2)  கிள் ளை
4. முடியாத துன்பம் பாலக்காட்டு ஐயர் சொல்வது இல்லை (3) (பேச்சு வழக்கு)  அல்லல்
5.அச்சம் பாதி அறிவு பாதி ஒத்துக்கொள். (4)  சம்மதி
7.புதுமையான நூல் தனம் முடிவுகளை நீக்கு. (3) நூல்தனம்
8.சிவன். நடு நீக்கினாலும் சிவன். (4)  அரவன்  (அரவன் = சிவன்; அரன் = சிவன்)
10.விதி மாறிய விகார் கல்மாடி கொண்டது. (3)  திகார்  (விகார் - வி + தி;  கல்மாடி என்பவர் சிறையிடப்பெற்ற இடம்)
11.அது மாறி அடித்தது மனம் பதைத்தது. (5)  துடித்தது (அடித்தது - அ + து)
13.சென்னையில் (இன்னொரு) தடவை காய்ச்சி. (3)  வாட்டி
15.என்னை நடுவே இழுத்த சின்னம் தரும் சீற்றம். (3)  சின்னம்
16.அப்ப முதல் முதல் பூதலம் சரிசெய். (2)  பூதலம்ரி (= அப்ப)

விடைகள் அனுப்பி ஊக்குவித்த 15 புதிர் ஆர்வலர்கள்:

கண்ணன், கீதா, தமிழ், ராமையா, பவளமணி பிரகாசம், ராமராவ், பார்த்தசாரதி, சௌதாமினி சுப்ரமண்யம், நாகராஜன், சாந்தி, ராமச்சந்திரன், சசி பாலு, நாகமணி, மாதவ், பாலாஜி


இவர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த பாராட்டுகள்.
தங்கள் பெயர் விடுபட்டிருந்தால் தெரிவிக்கவும்.  தவறுக்கு மன்னிக்கவும்.  
அதிகம் தவறப்பட்ட குறிப்புகள்: 8. நெடுக்கு (10 பேர்)


கருத்துத் தெரிவித்து மேலும் ஊக்கமளித்த அன்பர்கள்:


தமிழ்:
அருமையான புதிராக்கம்

ராமையா:
எல்லாப் புதிர்களுமே மிக நன்றாக உள்ளன.

Parthasarathy Srinivasan:
 As expected, a nice puzzle with good cluing and some new words.

Nagarajan:
Wonderful clues once again. Liked many of them.  

நாகமணி:
Clues are interesting! 

Comments

  1. சிறந்த பதிவு
    வரவேற்கிறேன்

    ReplyDelete
  2. அன்புள்ள அறிஞரே! தங்களுக்கென வலைப்பதிவர் விருது பகிரப்பட்டுள்ளது. அதனைத் தங்கள் தளத்திலும் பதிந்து உதவுமாறு விரும்புகின்றேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்வையிடுக.

    சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கும் வலைப்பதிவர் விருதா?
    http://eluththugal.blogspot.com/2014/09/blog-post_16.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2