மாவட்டம் -- மார்ச் 2015-1

முதல் வருகையா?  இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்:
http://muthuputhir.blogspot.com/2014/11/blog-post_9.html

1.  கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. 
2.  விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(.)mayam(@)gmail(.)com. என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

3.  வார்த்தைகளைத் தேட (விடை கண்டுபிடிக்க) இவை உதவும்: 
http://www.tamilvu.org/library/dicIndex.htm;
http://ta.wiktionary.org/wiki/
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/  
நிலாமுற்றம் தமிழ் அகராதி
நிலாமுற்றம் வழக்குச் சொல் அகராதி

நிலாமுற்றம் தொகைச் சொல் அகராதி
 
 
தமிழ் விக்கிபீடியா
(ஆங்கில) wikipedia 

 

இதுவரை விடைகள் அனுப்பியவர் பெயர் விவரம் பார்க்க:
http://tinyurl.com/xwordstatus

Comments:
மிக அருமை -- கோவிந்த் ராஜன்
அருமையான புதிராக்கம் -- தமிழ் 
Very interesting clues. Quite a few were challenging.  Congrats & thanks. Keep it up/  -- Parthasarathy  
A tough puthir. ..... the clues are challenging.
Thanks for a a very nice and interesting puthir.
-- Santhanam

pidiththavai:  6,9,14,15 -- வைத்தியநாதன் குறுக்கெழுத்துப் புதிர் -- மார்ச் 2015-1

குறுக்காக:
5.மாவட்டம் காண வந்தேனிங்கு. (2)
6.கவி முதல் போய் கொடை முதல் சேர்ந்த புனையாக்கம் களிறுக்குண்டு. (6)
7.தங்கமா செப்பினமா?(4)
8.அகங்காரமிகும் ஆயுதம். (3)
9.முற்றுப்பெறா இசைக் கருவி பசிக்குதவும். (3)
11.குற்றமற்ற மாலா முதலில் சிரித்தாள். (3)
13.உபசார வார்த்தை சொல்லி அரவணைக்க பாம்பு மறையும். (4)
16.உளம் நிறைந்த இரு மெல்லியலாரைத் தொடர்ந்து கலங்கிய மாந்தர். (6)
17.கேட்க உதவுவதைச் சொல். (2)

நெடுக்காக:
1.மதனி பொன் கடைசேர்த்த ஆண்மகன். (4)
2.களைப்பாக மெய்மறந்த சன்மார்க்க தாதி(5)
3.தொகுக்க முடியாது குழம்புவது எளிது. (3)
4.தலைவன் புகழ் தரும் நரம்புக் கருவி. (4)
10.சிறிது இடை விட்டு வந்த நாண்முகம். (5)
12.சிறியது மனது பெரும்பாலும் பேச்சின் பாதி (4)
14.பீஷ்மர் பெற்ற ராணி கடைசியில் மேற்பார்வையாளர். (4)
15.பூத்தொடுப்பது வேண்டுதலை ஐரோப்பாவின் வடமேற்கே காணலாம். (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2