குறுக்கெழுத்துப் புதிர் -- ஜூலை 2015-1

குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. முதல் வருகையா? இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்: https://muthuputhir.blogspot.com/2015/06/blog-post.html

1. கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. 

2. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(.)mayam(@)gmail(.)com. என்ற விலாசத்திற்கு அனுப்பவும். 

3. வார்த்தைகளைத் தேட (விடை கண்டுபிடிக்க) இவை உதவும்: (அ) https://www.tamilvu.org/library/dicIndex.htm; (ஆ) https://ta.wiktionary.org/wiki/; (இ) https://agarathi.com/index.php; (ஈ) https://dsal.uchicago.edu/dictionaries/fabricius/; (உ) நிலாமுற்றம் தமிழ் அகராதி; (ஊ) நிலாமுற்றம் வழக்குச் சொல் அகராதி: (எ) நிலாமுற்றம் தொகைச் சொல் அகராதி; (ஏ) தமிழ் விக்கிபீடியா; (ஐ) (ஆங்கில) wikipedia

குறுக்கெழுத்துப் புதிர் -- ஜூலை 2015-1

குறுக்காக:
5.பேச்சு வழக்கில் முடியாச் சிறுவன் பிறப்பி. (2)
6.உயிர்போன அரும்பு கனல் சேர்ந்து பிறந்த புதினம்.. (6)
7.சரம் மத்தியில் இடைகள் நீக்க ஒப்புக்கொள். (4)
8.பல் சொலிக்க சொக்க மறந்த பூச்சி. (3)
9.சக்களத்தி கொண்ட கூராயுதம். (3)
11.பாதி நீர்க்குமிழி இடுக்கியில். (3)
13.(ஸ்ரீ) ருத்ரம் பாஷ்யம் பதிப் பாதி கொண்ட மொழி. (4)
16.ஏழெள்ளுமேகம் இன்னும் வரவில்லை (3,3)
17.வேலை முடிவற்று மீண்ட வைகறை. (2)

நெடுக்காக:
1.பயத்தில் விசனம்; விபத்தில் இல்லை; படுக்கலாம்! (4)
2.சென்னையில் அகம்பாவம் பிடித்தவர்கள் பொருள் தரும் ஸ்வரம். (5)
3.அந்த மிதிலை அரசன் துவையல் அரைப்பான். (3)
4.தூக்கத்தில் வரும் சிவ தனுசு. (4)
10. மாருதி சிறு வால் கொண்ட மகா விஷ்ணு. (5)
12.குடியரசாக மாறிய ஆந்திர நகரம் வறுத்து உண்ணப்படும். (4)
14.தயக்கமுற்றார் முற்றாத(ன) விட்ட கந்தருவர். (4)
15.முதல் முதல் வள்ளல் தந்த ராகம். (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2