திங்கள், 29 ஜனவரி, 2018

பாரதிகலை - 2018-1


இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.

ஒரு செய்தி -பொன்மொழி, கவிதை யிலிருந்து ஓரிரு வரிகள் - இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. 

எழுத்துக்களை நெடுக்காக இடம் மாற்றி, மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

வெற்றுக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும். அவற்றை நீங்கள் இடம் மாற்றக் கூடாது.

புதிரையும், கீழ் உள்ள வெற்றுக் கட்டங்களையும் பிரதி எடுத்துப் புதிரை விடுவிக்க வேண்டி இருக்கும்.


முதல் முறையாக இந்தப் புதிரை விடுவிக்க முயல்வோர் கீழே கொடுக்கப் பட்டிருக்கும்  ”முக்கியக் குறிப்புகள்:”  மற்றும் “மாதிரிப் புதிர்:  (விடையுடன்”) பார்க்கவும்.

ந்குறுவாகுப்றிரிடும்
த்தியிற்னிக்கு
ல்யிம்;க்ண்ம்ப்சோனைவேண்வி
லாது-ழுடும்பாருல்ர்
ங்ற்வேந்ச்றி


முக்கியக் குறிப்புகள்:

(முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு)
     1.  இறுதி விடை இடமிருந்து வலமாகப் படிக்கப்படும்  மேலிருந்து கீழ் பற்றி அக்கறை இல்லை.
     2.  நெடுக்காக (மேலிருந்து கீழ்) எந்த எழுத்தும் எந்த இடத்திற்கும் மாற்றப் படலாம்; இடையில் உள்ள வெற்றுக்    கட்டங்களைத்  தாண்டியும்  மாற்றப்படலாம். 
    3. இந்த வகைப் புதிர்களை விடுவிக்க,  அடிப்படைத் தமிழ் இலக்கண அறிவே போதும்.  உதாரணமாக, மெய்  எழுத்துக்களும், சில உயிர்மெய் எழுத்துக்களும் சொல் முதலில் வாரா.   அதே போல் உயிர் எழுத்துக்கள்
சொல் இடையிலும், கடைசியிலும் வாரா.
     4.   வெற்றுக் கட்டங்களுக்கு இடையே இருக்கும் சொற்களைக் கண்டுபிடித்து விட்டால் மொத்தச் செய்தியும் அநேகமாகத் தெரிந்து விடும்!
மேற்கூறியவற்றை ஒரு எளிய உதாரணம் கொண்டு பார்ப்போம். 


மாதிரிப் புதிர் (விடையுடன்): 


(நெடுக்காகக்) கலைக்கப்பட்டது (புதிர் வடிவம்):
புதிர் விடுவித்த பிறகு:தங்கள் விடையையும், மேலான கருத்துக்களையும் படிவத்தில் இடவும்.

இங்கு கலைத்துக் கொடுக்கப்பட்டிருப்பது மகாகவியின் பாடல் ஒன்றிலிருந்து சில வரிகள்.  எந்தப் பாடல் என்ற விவரம் அவசியம் 

இல்லை; பாடலின் இடையிலிருந்து, அதிகம் பாடப்படாத சில வரிகள் இங்கிருப்பதால், மேற்கூறிய விவரம் தெரிந்தாலும் பயனில்லை!

1 கருத்து :

  1. பங்கேற்று விடை அனுப்பினவர்கள் விவரம் பார்க்க இங்கு செல்லவும்: https://goo.gl/VGKzGi ப்னக்கேற்று ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

பின்பற்றுபவர்கள்