கலைமொழி - 79: முல்லா நஸ்ருத்தீன்

பின்னணிக் கதை:


ஒருமுறை முல்லா நஸ்ருதீன் அண்டை வீட்டுக்காரனிடம் ஒரு பானை இரவல் வாங்கிச் சென்றார். சில நாட்கள் பொறுத்து அந்தப் பானையையும் அதனோடு ஒரு சிறிய பானையையும் கொண்டு வந்து கொடுத்தார். 

       ”நான் ஒரு பானைதானே கொடுத்தேன்! இதென்ன ஒரு சிறிய பானை?” என்று வியப்போடு கேட்டான் பானைக்குச் சொந்தக் காரன்.

 “ஐயா, உங்கள் பானை என் வீட்டில் இருக்கும்போது குட்டி போட்டது. அது சட்டப்படி உங்களுக்குத்தான் சொந்தம். அதனால் அதனையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டேன். வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். 

         இரவல் கொடுத்தவன் இரண்டு பானைகளையும் வாங்கிக்கொண்டான்.

    சில நாட்களுக்குப் பிறகு அண்டைவீட்டுக்காரனிடம் மீண்டும் ஒரு பெரிய பானை இரவல் கேட்டார்.  அண்டை வீட்டான் ஓன்றுக்கு இரண்டாகக் கிடைக்குமென்ற சந்தோஷத்தில் ஒர் பெரிய பானையாகக் கொடுத்தான்.

பல நாட்களாகியும் முல்லாவிடமிருந்து பானை வரவில்லை. 

     அதனால் அண்டை வீட்டுக்காரன் தன்னிடமிருந்து வாங்கிச் சென்ற பானைகளைத் திருப்பித் தருமாறு கேட்டான். நஸ்ருதீன் உடனே சோகக் குரலில், “நண்பரே! உங்கள் பானைகள் என்னிடம் இருந்தபோது பிரசவ வலியில் இறந்து போயின. பானைகள் பிரசவிக்கும் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே” என்று கூறினார். 

அண்டை வீடுக்காரனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.  “என்னை ஏமாந்தவன் என்றா நினைக்கிறீர்கள்”  என்றான்.  அதற்கு முல்லா அவனைத் திருப்பி ஒரு கேள்வி கேட்டது, அண்டை வீட்டான் பேசாமல் திரும்பிச் சென்றுவிட்டான்.  

அப்படி முல்லா கேட்டது என்ன?

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடித்தால் தெரியும்!
 

ஒரு பத்தியில் (column) இரண்டு கட்டங்களைத் தட்டினால் அந்தக் கட்டங்களிலுள்ள எழுத்துக்கள் இடம் மாறும்.
வெற்றுக் கட்டங்கள் வார்த்தை முடிவை அல்லது வாக்கிய முடிவைக் குறிக்கும்.  அவற்றை இடம் மாற்றக் கூடாது.
எழுத்துக்களை நெடுக்காக, வெற்றுக் கட்டம் தாண்டியும் இடம் மாற்றலாம்.


புதிரை முழுதும் விடுவித்த பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்” என்னும் பொத்தானை அழுத்தினால், நீங்கள் சரி செய்த வரிகள் வலப்புறமுள்ள பெட்டியில் காணக் கிடைக்கும். அதைப் பிரதி எடுத்துப்  பின்னூட்டத்தில் (post comments)  அல்லது இந்தப் படிவத்தில் இடவும்.


******************************************************************************************************************************
******************************************************************************************************************************






முதன்முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)

முக்கியக் குறிப்புகள்:

(முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு)
     1.  இறுதி விடை இடமிருந்து வலமாகப் படிக்கப்படும்  மேலிருந்து கீழ் பற்றி அக்கறை இல்லை.
     2.  நெடுக்காக (மேலிருந்து கீழ்) எந்த எழுத்தும் எந்த இடத்திற்கும் மாற்றப் படலாம்; இடையில் உள்ள வெற்றுக்    கட்டங்களைத்  தாண்டியும்  மாற்றப்படலாம். 
    3. இந்த வகைப் புதிர்களை விடுவிக்க,  அடிப்படைத் தமிழ் இலக்கண அறிவே போதும்.  உதாரணமாக, மெய்  எழுத்துக்களும், சில உயிர்மெய் எழுத்துக்களும் சொல் முதலில் வாரா.   அதே போல் உயிர் எழுத்துக்கள்
சொல் இடையிலும், கடைசியிலும் வாரா.
     4.   வெற்றுக் கட்டங்களுக்கு இடையே இருக்கும் சொற்களைக் கண்டுபிடித்து விட்டால் மொத்தச் செய்தியும் அநேகமாகத் தெரிந்து விடும்!
மேற்கூறியவற்றை ஒரு எளிய உதாரணம் கொண்டு பார்ப்போம். 

மாதிரிப் புதிர் (விடையுடன்): 
(நெடுக்காகக்) கலைக்கப்பட்டது (புதிர் வடிவம்):

******************************************************************************************************************************

புதிர் விடுவித்த பிறகு:




கலைமொழிப் புதிர் ஆர்வலரா?  இந்த கூகிள் “அப்” (App) உங்களுக்குப் பிடிக்கும்!

https://play.google.com/store/apps/details?id=com.ygames.yquotepuz

நீங்களும் கலைமொழிப் புதிர் அமைக்கலாம்:  http://inamutham.freeasphost.net/kalaimozhi/kalaimozhi.asp

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2