நவம்பர் 2019 - வாரம் 2: திருப்புளி

குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. முதல் வருகையா? இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்: http://muthuputhir.blogspot.com/2015/06/blog-post.html
********************************************************************************
நவம்பர் 2019 - கு. பு. 2:

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
3.காப்தம் தொடங்கையில் கலைந்து குலைந்த புராண நாயகி. (5)
6.சுகமற்ற இரத்தினச் சுருக்கம் இவளின் பெயர். (4)
7.பருகிடப் புளித்ததில் மேற் போகாத நிலை. (4)
8.புதுப்பித்த(து) மெய்மறந்து புத்தி பாதித்த(து) (6)
13.மாரடிச்சு முறித்து ரத்து ரத்து செய்த திருடன். (6)
14.ஆங்கில சாலை சுற்றித் தேடிக் கிடைத்த சாரதி (4)
15.கடை போன முப்பால் இரண்டாம் சுரப்பி சேர்ந்த இனிப்பு. (4)
16.வரி இல்லா மான் தெரிவதும் கண்ணகி சீற்றத்தில் எரிந்ததும் ஒன்றே. ( 5)

நெடுக்காக:
1.மரியாதைக்குரிய புளி திருகாணியைஇறுக்கும் கருவி. (5)
2.உட்கார ஒரு நட்சத்திரம் ஆனந்தி முடித்த புதினம். (5)
4.அளவு குறைந்த அரைக் கிறுக்கு பாதி குயவர் மயங்கினார்.(4)
5.தவறுக்கும் இறுதி உண்டு நிறுத்தும் உபாயம்.(4)
9.திட்ட மறந்து திட்டிகிட்ட இறுக்குங்கோல் (3)
10.ஈரச் சுவர் மறைத்த ஆண்டவர்.(5)
11.பார்ப்பதை அறியார் - அதை யார் நீக்கித் திருடுவார்?(5)
12.பரோடா நடு கொண்ட வீடு சுகம் தரும். (4)
13.இயலாது கிரீடம் எது? (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2