நவம்பர் 2019: வாரம் 4: கலைமொழி: முல்லா நஸ்ருதீன்

பின்னணிக் கதை:



ஒருமுறை முல்லா நஸ்ருதீன் அண்டை வீட்டுக்காரனிடம் ஒரு பானை இரவல் வாங்கிச் சென்றார். சில நாட்கள் பொறுத்து அந்தப் பானையையும் அதனோடு ஒரு சிறிய பானையையும் கொண்டு வந்து கொடுத்தார். 

       ”நான் ஒரு பானைதானே கொடுத்தேன்! இதென்ன ஒரு சிறிய பானை?” என்று வியப்போடு கேட்டான் பானைக்குச் சொந்தக் காரன்.

 “ஐயா, உங்கள் பானை என் வீட்டில் இருக்கும்போது குட்டி போட்டது. அது சட்டப்படி உங்களுக்குத்தான் சொந்தம். அதனால் அதனையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டேன். வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். 

         இரவல் கொடுத்தவன் இரண்டு பானைகளையும் வாங்கிக்கொண்டான்.

    சில நாட்களுக்குப் பிறகு அண்டைவீட்டுக்காரனிடம் மீண்டும் ஒரு பெரிய பானை இரவல் கேட்டார்.  அண்டை வீட்டான் ஓன்றுக்கு இரண்டாகக் கிடைக்குமென்ற சந்தோஷத்தில் ஒர் பெரிய பானையாகக் கொடுத்தான்.

பல நாட்களாகியும் முல்லாவிடமிருந்து பானை வரவில்லை. 

     அதனால் அண்டை வீட்டுக்காரன் தன்னிடமிருந்து வாங்கிச் சென்ற பானைகளைத் திருப்பித் தருமாறு கேட்டான். நஸ்ருதீன் உடனே சோகக் குரலில், “நண்பரே! உங்கள் பானைகள் என்னிடம் இருந்தபோது பிரசவ வலியில் இறந்து போயின. பானைகள் பிரசவிக்கும் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே” என்று கூறினார். 

அண்டை வீடுக்காரனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.  “என்னை ஏமாந்தவன் என்றா நினைக்கிறீர்கள்”  என்றான்.  அதற்கு முல்லா அவனைத் திருப்பி ஒரு கேள்வி கேட்டதும், அண்டை வீட்டான் பேசாமல் திரும்பிச் சென்றுவிட்டான்.  

அப்படி முல்லா கேட்டது என்ன?

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடித்தால் தெரியும்!
 

ஒரு பத்தியில் (column) இரண்டு கட்டங்களைத் தட்டினால் அந்தக் கட்டங்களிலுள்ள எழுத்துக்கள் இடம் மாறும்.
வெற்றுக் கட்டங்கள் வார்த்தை முடிவை அல்லது வாக்கிய முடிவைக் குறிக்கும்.  அவற்றை இடம் மாற்றக் கூடாது.
எழுத்துக்களை நெடுக்காக, வெற்றுக் கட்டம் தாண்டியும் இடம் மாற்றலாம்.

புதிரை முழுதும் விடுவித்த பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்”  (Completed) என்னும் பொத்தானை அழுத்தினால், நீங்கள் சரி செய்த வரிகள் வலப்புறமுள்ள பெட்டியில் காணக் கிடைக்கும். அதைப் பிரதி எடுத்துப்  பின்னூட்டத்தில் (post comments)  இடவும்.
**************************************************************************************************************************************************

Comments

  1. சரி ரெண்டையும் நம்பிடறேன்

    ReplyDelete
  2. From your explanation it is not clear that blank spaces also can be shifted up or down. Still I assumed it and solved it.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. புதிர்க் கட்டத்திற்கு மேல் இரண்டாவது பத்தியில் இவ்வாறு இருக்கிறது: "வெற்றுக் கட்டங்கள் வார்த்தை முடிவை அல்லது வாக்கிய முடிவைக் குறிக்கும். அவற்றை இடம் மாற்றக் கூடாது.
      எழுத்துக்களை நெடுக்காக, வெற்றுக் கட்டம் தாண்டியும் இடம் மாற்றலாம்." Thus the blank spaces need to be left undisturbed. The letters can be swapped up or down, by moving vertically above or below past the blank squares if need be.

      Delete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2