கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி
புதிர் அமைப்பும் குறிக்கோளும்: கட்டங்களில் ஒரு செய்தி கலைத்துக் கொடுக்கப்படும். ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் இருக்கலாம். நெடுக்காக மட்டும் கலைத்துக் கொடுக்கப்படும். கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளை குறிக்கும். அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி, மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முக்கியக் குறிப்புகள்: (முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு) 1. இறுதி விடை இடமிருந்து வலமாகப் படிக்கப்படும். 2. நெடுக்காக (மேலிருந்து கீழ்) எந்த எழுத்தும் எந்த இடத்திற்கும் மாற்றப் படலாம்; இடையில் உள்ள வெற்றுக் கட்டங்களைத் தாண்டியும் மாற்றப்படலாம். 3. இந்த வகைப் புதிர்களை விடுவிக்க, அடிப்படைத் தமிழ் இலக்கண அறிவே போதும். உதாரணமாக, மெய் எழுத்துக்களும், சில உயிர...
Comments
Post a Comment