பின்னணி: சில தமிழ்ச் சொற்களுக்கும், பழமொழிகளுக்கும் விளக்கமோ, மூலமோ சரியாகக் கிடைப்பதில்லை. என் சிந்தனையில் இந்த மாதிரி சில சொற்களுக்கும், பழமொழிகளுக்கும் இப்படி (சற்று மாறான, புதிய) விளக்கம் இருக்குமோ என்று தோன்றுகிறது. அவற்றை இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன். உதாரணங்கள்: 1) சில சொற்கள்/சொற்றொடர்கள்: அக்கு வேறு, ஆணி வேறு கொள்ளுத் தாத்தா/பாட்டி/ பெயரன்/பெயர்த்தி (பேத்தி) குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவது தேரை ஓடின காய் 2) பழமொழிகள்: அதிகப் படித்த மூஞ்சூறு காடிப்பானையில் விழுந்ததாம். அக்கு வேறு, ஆணி வேறு சுருக்கமாக: நாம் மிகச் சாதாரணமாக “அக்கு வேறு ஆணி வேறாகப்” பிரித்து விட்டார் என்று சொல்கிறோம். இந்தப் பயன்பாட்டிற்கு வலைத்தளங்களில் சில விளக்கங்கள் இருக்கின்றன. என் சிந்தனையில், அச்சு வேறு, ஆணி வேறாக” (ஒரு கடிகாரம், மிதி வண்டி போன்ற) இயந்திரப் பொறிகளைப் பல பாகங்களாக, முக்கியமாக சக்கரங்களின் அச்சாணிகளை, அச்சு வேறு, ஆணி வேறாகப் பிரித்துப்போடுவது என்பது, பேச்சு வழக்கில் “அக்கு வேறு, ஆணி வேறாக”ப் பி...
Comments
Post a Comment