திங்கள், 29 ஜனவரி, 2018

பாரதிகலை - 2018: 2

வழிமுறை
கீழே உள்ள கட்டங்களில் மகாகவி பாரதியாரின் மிகப் பிரபலமான பாடல் ஒன்றின் (அதிகம் பிரபலப்படுத்தப்படாத) சில வரிகள் நெடுக்காக மட்டும் கலைந்துள்ளன. வெற்றுக் கட்டங்கள் வார்த்தை அல்லது  வாக்கிய முடிவுகளைக் குறிக்கின்றன. அவற்றை நீங்கள் இடம் மாற்றக் கூடாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்ற வேண்டும். எழுத்துக்களை மெல்ல தட்டித் (click) தட்டி இப்பக்கத்திலேயே புதிரை அவிழ்க்கலாம்.

புதிரை முழுதும் விடுவித்த பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்” என்னும் பொத்தானை அழுத்தினால், நீங்கள் சரி செய்த வரிகள் வலப்புற்முள்ள பெட்டியில் காணக் கிடைக்கும். அதைப் படிவமெடுத்துப் பின்னூட்டத்தில் (post comments) இடவும்.

முதல் முறையாக இந்தப் புதிரை விடுவிக்க முயல்வோர் கீழே கொடுக்கப் பட்டிருக்கும்  ”முக்கியக் குறிப்புகள்:”  மற்றும் “மாதிரிப் புதிர்:  (விடையுடன்”) பார்க்கவும். முக்கியக் குறிப்புகள்:

(முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு)
     1.  இறுதி விடை இடமிருந்து வலமாகப் படிக்கப்படும்  மேலிருந்து கீழ் பற்றி அக்கறை இல்லை.
     2.  நெடுக்காக (மேலிருந்து கீழ்) எந்த எழுத்தும் எந்த இடத்திற்கும் மாற்றப் படலாம்; இடையில் உள்ள வெற்றுக்    கட்டங்களைத்  தாண்டியும்  மாற்றப்படலாம். 
    3. இந்த வகைப் புதிர்களை விடுவிக்க,  அடிப்படைத் தமிழ் இலக்கண அறிவே போதும்.  உதாரணமாக, மெய்  எழுத்துக்களும், சில உயிர்மெய் எழுத்துக்களும் சொல் முதலில் வாரா.   அதே போல் உயிர் எழுத்துக்கள்
சொல் இடையிலும், கடைசியிலும் வாரா.
     4.   வெற்றுக் கட்டங்களுக்கு இடையே இருக்கும் சொற்களைக் கண்டுபிடித்து விட்டால் மொத்தச் செய்தியும் அநேகமாகத் தெரிந்து விடும்!
மேற்கூறியவற்றை ஒரு எளிய உதாரணம் கொண்டு பார்ப்போம். 


மாதிரிப் புதிர் (விடையுடன்): 

(நெடுக்காகக்) கலைக்கப்பட்டது (புதிர் வடிவம்):புதிர் விடுவித்த பிறகு:


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்